உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

125

கு. பூங்காவனர்க்கு எழுதுகின்றாரே பாவாணர்! (4-10-79). இவற்றை நோக்கப் பாவாணர்க்கு உதவவில்லை என்று கூற முடியாதே! ஆம்! பாவாணர்க்கு உதவியாக வாழ்வுக்கு உதவியாக இருந்தது. துறைக்கு உதவியாகவில்லை!

-

5-1-79 இல் கூட எழுதினார்:

-

"என் பணிக்கு வேண்டிய இருதுணையாளரை இன்னும் அமர்த்தவில்லை. ஓர் இயங்கியும் தொலை பேசியும் வேண்டு மென்று எத்தனை முறை சொல்லியும் செவி சாய்க்கவில்லை. முந்திய ஆட்சியும் இங்ஙனமே."

என் சொந்த நூலகத்தைக் கொண்டே பணி நடந்து வருகின்றது. சம்பளத்தில் பாதி பொத்தகத்திற்குச் செலவாகிறது. இறைவனருளால் இறுதிவரை பணிதொடர்ந்தாற்

போதும்"

இது,பாவாணர் அன்புமாணவர் சு. பொன்னுசாமியார்க்கு வரைந்தது. இதில்கடைசிச் செய்தி ஒன்றேநிறைவேறியமை எவரும் அறிந்தது.

அரசியல் அலுவலகப்பணிகள் வேண்டியவற்றிற்கு ஓராண்டு செல்கின்றது.

ஒரு நாளில் நடக்க

ஒன்றை அரசிடம் கொடுத்துமீளப் பெறுவது பூதத்திடம் கொடுத்ததைப் பெறுவது போன்றது.

"தமிழைப் பிடித்த நோய்முகன் (சனியன்) இன்னும் அதைவிடவில்லை."

கேரளப் பல்கலைக் கழகத்தில் சூரநாடு குஞ்சன் பிள்ளைதலைமையில் தொகுக்கப்பெறும் மலையாள அகரமுதலி அலுவலகப் பணியர் நாற்பத்தைவர். இதைக் கலைஞர்க்குத் தெரிவப்பேன் என 19-7-75 இல் பாவாணர் குறிப்பிடுகிறார்.

தி.மு.க. அரசுக் காலத்திலும், அ.தி.மு.க. அரசுக் காலத்திலும் அமைச்சுக்கட்டிலிலும், பொருட் பொறுப்பிலும் இருந்தவர் நெடுஞ்செழியனார். அவரைப் பல்கால் கண்டு முறையிட்டார்; மணிக்கணக்கில் காத்திருந்தும்கூடத் திரும்பினார். அக்காத் திருக்கையால் சலிப்புமுற்றார் பாவாணர். ஒருமுறை இருவர்தம் உரையாட்டுச் செய்திகள் இவை:

(4

"அகரமுதலி முடிய எத்துணைக் காலம் செல்லும் என்று மாண்புமிகு கல்வியமைச்சர் வினாவினார். பெருக்கமாகச்