உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

செய்தால் 12 ஆண்டென்றும், சுருக்கமாகச் செய்தால் 30-4-78 இற்குள் என்றும் சொன்னேன். சுருக்கமாய் வேண்டாம் என்றும், 12 ஆண்டு மிக நீண்ட தென்றும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், என் காலத்திற்குப்பின் வேறெவரும் எச்சத்தைத் தொடர்ந்து செய்ய இயலாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அவர் குறிப்பறிந்து இறைவன் அருளால் இன்னம் பன்னீ ராண்டிருப்பேன் என்னும் நம்பிக்கை எனக் குண்டென்றேன். அவர் நம்பவில்லை. இன்னும் நாலாண்டிற்குள் முடித்துவிட வேண்டும் என்பது அவர் கருத்து. ஆகலின் முதன் மடலம் வெளிவந்தபின் அவர் கருத்து மாறத்தான் செய்யும். அங்ஙனம் மாற்றுவது நம் கடமை. இயன்ற வரைவிரைந்து பணி செய்வதே நாம் செய்யக்கூடியது. இறைவன் அருள் நம் பக்கம்தான் இருக்கும்."

அவர் காலத்தில் அவர் விரும்பிய துணைகளோ, உதவிகளோ வாய்க்கவில்லை. அவர் எழுதி முடித்த முதன்மடலமும் அச்சேறிற்றிற்றிலை. அதனை எவ்வாற்றேனும் ஆறாம் உலகத்தமிழ் மாநாட்டுக்குமுன் (1981 சனவரி) அச்சிட்டு முடிக்கப் பேரவாக் கொண்டார் பாவாணர். அம்மடலம் ஒன்றைக் காட்டியேனும் உலகப்பேரறிஞர் உள்ளத்தைத் தமிழ்வளத்தின் பால்திருப்ப முயன்றார் பாவாணர். அது நிறைவேறாமையால் தாம் எழுதவிருந்த, "The Lemurian Language and its Ramifications” என்னும் நானூறு பக்க நூலின் சுருக்கமான 52 பக்கத் தட்டச்சுப்படியை நெய்வேலி பாவாணர் தமிழ்க் குடும்ப உதவியுடன் உலகப்பேரறிஞர்களுக்கு இலவயமாக வழங்கினார்.

ஆறாம் உலகத்தமிழ் மாநாட்டுக்கு எவ்வளவு ஆர்வத்தோடு வந்தார் பாவாணர்! எத்தனை எத்தனை எண்ணங்கள் கொண்டிருந்தார் பாவாணர் :

"நான் மாநாட்டு வரவேற்புக்குழு உறுப்பினருள் ஒருவன். குழுத்தலைவர் முதலமைச்சரே. பொது வகையில், 'குமரி நாடே தமிழன் பிறந்தகம்' என்னும் கட்டுரை மாநாட்டு மலர்க்கு விடுத்திருக்கின்றேன். வேறு கட்டுரை ஒன்றும் படிக்கவில்லை."

An Epitome of the Lemurian Language and its Ramifi- cations என்னும் ஆங்கிலக்கட்டுரை 10 படிகள் தட்டச்சடிப்பித்து முதல்வர்க்கும் முதன்மையான வெளி நாட்டறிஞர்க்கும் வழங்கப்படும். அதன் இறுதியில் மாநாடு நடத்தும் உரிமையை வையாபுரிக் குழுவில் இருந்து தமிழ் நாட்டரசு கைப்பற்ற