உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

127

வேண்டும் என்றும், அடுத்த மாநாடு செனகல் நாட்டில் நடைபெற வேண்டும் என்றும் அதிலே தமிழே உலகமுதல் உயர்தனிச் செம்மொழி என்பது நாட்டப்பட வேண்டும் என்றும் உள்ளது. இதற்காகவே இறுதிநாளில் கிளர்ச்சி செய்ய உண்மைத் தமிழர் திரண்டு வரவேண்டும்.

இனிமேல் தமிழ்நாட்டுப் பிரிவினை இயல்வதன்று. போரை ஒழித்து ஒற்றுமையும் அமைதியும் நல்வாழ்வும் நிலைநாட்ட உலகம் ஒன்றாதல் வேண்டும். ஒன்றிய நாட்டினங்கள் (UN) என்னும் ஒன்றாத நாட்டினங்கள் மாறி உலகப் பொது நாயகம் என்னும் ஒரே பொது ஆட்சி தோன்ற வேண்டும். தமிழ் எல்லா மொழிகட்கும் அடிப்படை ஆதலால் உலகப்பொது மொழியாதல் வேண்டும். தமிழ்நாடு பிரிந்தால் தமிழ்நாட்டிற்குள்தான் தமிழிருக்கும். சிறை செல்லும்போதே மன்னிப்புக் கேட்கும் இருபதின்மரைக் கொண்டு தமிழ்நாட்டு விடுதலை பெறுவதும் குதிரைக் கொம்பே.

ஆங்கிலக்கட்டுரையை மாநாட்டில் வழங்கப் பலபடிகள் வேண்டும்.2-12-80 இற்கு மேல் நெய்வேலி அன்பருள் பொறுப்பு வாய்ந்தவர் எவரேனும் இங்குவரின் ஒருபடி தருவேன். அதை நெய்வேலியில் படியெடுக்கலாம். அச்சிற்கு நாளில்லை. ஆங்கிலநூல் சற்றுப் பிந்திவரும். பிந்தப் பிந்தச் சிறப்பு மிகும். இதுவே தமிழ்ப்பாதுகாப்பு நூல் "இக்கடிதம் நெய்வேலி பாவாணர் தமிழ்க் குடும்பத்திற்கு 12-12-80 இல் விடுக்கப்பட்டது.

46

""