உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. விழாவும் விருதும்

தமிழ்ப் பெருங்காவலர்

மதுரை தமிழ்க்காப்புக் கழகம் பாவாணர்க்குச் சிறப்புச் செய்யக் கருதியது. 12-1-64 இல் அவர்க்குச் சிறப்புச் செய்வதுடன் அவர் சிறப்புரை கேட்கவும் திட்டமிட்டது. பாவாணர்க்குத் 'தமிழ்ப்பெருங்காவலர்' என்னும் பட்டம் வழங்கிப் பட்டும் போர்த்திப் பாராட்டினார் காப்புக் கழகத் தலைவர் பேரா.சி. இலக்குவனார். வேறு சிலரும் பாவாணரைப் பாராட்டிப் பேசினர்; பாவாணர் சிறப்புரை முற்றிலும் சொல்லாய்வாகவே விளங்கியது.

'பட்டம்' துணி என்னும் பொருளது எனத் தொடங்கிப் பட்டு, பட்டயம், பட்டோலை, பட்டாங்கு என்பனவற்றின் பிறப்பையெல்லாம் விரித்தார்.

கள் - பன்மையீறு. கலத்தல் -கல-கல்-கள்-களம் - கூட்டம்; பலகலத்தல்கள் என விளக்கினார்.

-

மாற்றம் மாட்ட மாட்லாடு; மாறிச் சொல்வது மாற்றம், மாட்டாடு-கன்னடம்.

புத்தகம் -பொத்தகம்; பொத்து - போத்து - போந்து போந்தை - புத்தகம்; "பொத்தகம் படிக மாலை” வடை - வட்டை என்பதன் இடைக்குறை.

பெட்டை பெடை;

-

கிள்ளி - கிளி. இலை காய் கனிகளைக் கிண்ணி எடுப்பது.

வெற்றிலை (பீற்றல்) - ஆங்கில அகர முதலி தமிழ்ச் சொல் என்று கூறும். வடமொழி அகரமுதலியில் அஃதில்லை.

உவணம் - பருந்து. உ-உயரத்தைக் குறிக்கும்.

உவண்

உவணை

-

வணர்.

சகரம் சேர்ந்து சுவணம்