உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

சொற்கள் உயிரில் தோன்றி மெய்யொடு கூடுதல்.

உருள் - சுருள்; உழல் -சுழல்.

-

129

முத்து - அம் -அம்பெருமைப் பொருள் ஈறு. முத்தி - விடுதலை. சிப்பியில் இருந்து முத்து விடுதலை பெறுதல். மணித்தக்காளி மணி = = சிறுமை; மணிக்குடல், மணிப்புறா, மணிக்கயிறு. திண்ணென்று இருந்தவன் திண்ணன்; வழவழப்பு- வாழை. வாழ்வடியாகச் சொல்வது ஆரவாரம்.

வ்வாறு சொல்லாய்வு நிகழ்த்தியதுடன் டை

இடையே கருத்துரைகளும் வழங்கினார்.

"நம் கலத்தில் அயலான் தன் பெயரைப் பொறித்துக் கொண்டான்; வழக்குத் தொடர்ந்து உண்மையை நிலைநாட்டும் கடமை நமக்கு உண்டாயிற்று.

"தாய் இடத்தில் மகள் எடுத்துக் கொண்டால் குற்றமில்லை. அயலார் திருடினால்?"

"பலநாடு சுற்றுபவன் ஏமாற்றுபவன்; உள்ளூரான் ஏமாறுவான்.'

"சோற்றுக்குத்தான் பஞ்சம், சொல்லுக்குமா பஞ்சம்?

"ஆய் ஆண்டிரன் என்பது ஆந்திரன் என்பதிலிருந்து வந்தது என்பது,"பரதன் என்பவனில் இருந்து பிரிட்டன் என்பது பிறந்தது என்பது போன்றது."

என்பவை அவை. தமிழ்க் காப்புக் கழகங் குறித்து, 'இசைத்தமிழ்க் கலம்பக' த்தில் வரும் பாடல். தம் நன்றியறிதல் வெளிப்பாடேயாம்.

பாவாணருக்கு மணிவிழா:

இந்த நாட்டில் பாவாணருக்குச் சிறப்புச் செய்ய ஆளில்லையே என்று வருந்தியவர் பர். மா. இராசமாணிக்கனார். அவர்மதுரை எழுத்தாளர் மன்ற முன்னாள் தலைவர். அதன் விளைவால், 1961 ஏப்பிரல் 9 ஆம் நாள் ஞாயிறன்று பாவாணரை அழைத்து நிலவு விருந்தளித்தும் பொன்னாடை போர்த்தியும் மன்றம் சிறப்புச் செய்தது. அந்நாள் தலைவர் உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி அவர்கள்.

இராசமாணிக்கனார்க்கு, 'பாவாணர்க்குச் செய்த இச்சிறப்புப் போதாது' என்று கருத்து உண்டாகியிருக்கிறது. அதனால் 23-3-67