உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

இல் தமிழ் எழுத்தாளர் மன்றச் செயலாளர் கருணையாரிடம் "நீங்கள் வருவதற்குச் சற்று முன்னர்தான் பாவாணர் இங்கிருந்து சென்றார். நீங்கள் வந்திருந்தால கண்டு உரையாடியிருக்கலாம். அவர்க்கு வேலையும்போய் மிகவும் துன்பப்படுகிறார். நம் எழுத்தாளர் மன்றத்தில் ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்குப் பாராட்டும் விருந்தும் அளிக்கிறீர்கள்: அதைவிடப் பாவாணர்க்குச் சிறப்பாக மணிவிழாக் கொண்டாட வேண்டும் என்பது என் விருப்பம். அவர் பொதுவகைப் பேராசிரியர் அல்லர். மிகப்பெரும் ஆராய்ச்சியாளர். வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர். செய்திறமையும் உறதியும் வினையாண்மையும் கொண்டவர். அவருடைய ஆய்வுத்திறன் அளிப்பரியது. நாங்கள் உங்கள் போன்றோர்க்கு மட்டுமே எழுதுகின்றோம். அவர் என்போன்ற ஆசிரியனுக்கும் ஆராய்ச்சியாளர்க்கும் எழுதுகின்றார். அவருடைய புத்தகங்கள் எளிதில் விலைபோகா. ஆனால் அனைத்தும் நிலைத்து நிற்பன. தமிழில் ஆரியமொழி புகுவதை வன்மையாகக் கண்டிப்பவர். அதனால் தொல்லைகள் அவரைத் தொடர்கின்றன. எனவே அப்பெரியார்க்கு மதுரையில் அதுவும் நம் மன்றத்தினர் கூடி விழா எடுத்தால்தான் சிறப்பு. விரைவில் அதற்கொரு குழுவைத் தொடங்குங்கள் என்னால் இயன்ற உதவியை இங்கிருந்தே செய்வேன்" என்றார். அரசமாணிக்கனார் மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்து சென்னைக்கு வந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிவந்த காலம் அது.

அவர் உரைப்படி உடனே மணிவிழா ஏற்பாடு தொடங்கிற்றில்லை. 6 திங்கள் சென்றுவிட்டன. ஒரு நாள் அரசமாணிக்கனார் மீண்டும் மதுரைக்கு வரும் சூழல் அமைந்தது. எழுத்தாளர் மன்ற அன்பர்களிடம் பாவாணர் உயர்ந்த பண்பாளர். ஆனால் உலக இயல் தெரியாதவர். அதனால் மிகவும் துன்பப்படுகிறார். அவருடைய நூலைப் பாடப் புத்தகமாகக் கல்லூரிகளுக்கு வைத்தால் குறைந்தது பத்தாயிரம் வரை கிடைக்கும். பொத்தகத் தேர்வுக் குழுவில் நான், ஏ.சி.செட்டியார், அவ்வை போன்றோர் தாம் இருக்கிறோம். எளிதாகச் செய்து முடிக்கலாம். நூல் எழுதிக் கொண்டு வந்து பர்.மு.வ. அவர்களைப் பாருங்கள் என்றேன்.நான் என்ன பார்ப்பது? என் திறமையை மு.வ. அறியாரா? நான் போய்ப் பார்க்க முடியாது" என்று மறுத்து விட்டார். அவர் ஒரு வணங்காமுடி; தன்மானமிக்கவர்; யாரையும் அண்டமாட்டார். அவர்க்கு உங்கள் போன்றோர் உழைத்து ஒரு