உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

131

தொகை திரட்டி அவருடைய நூல்களை வெளிக்கொணர்ந்தால் தமிழும், தமிழகமும் பல்லாண்டுகட்குப் பயன்பெறும். இந்த அரசு அவர்க்கு மாதச் சம்பளத்தைக் கொடுத்துத் தனியாக ஓர் இடத்தைக் காட்டி உங்களால் எவ்வளவு எழுத முடியுமோ எழுதி எழுதிக் கொடுங்கள்; நாங்கள் அச்சிட்டுக் கொள்கின்றோம் என்று அமர்த்தினால் தமிழுக்கு நன்மைசெய்ததாகும்; எங்கே இந்த அரசு செய்யப்போகிறது. செய்யாது. நம்போன்றோர் தாம் அப் புத்தகங்களில் ஒன்றிரண்டாவது வெளிவர வழிவகுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

ப-ர். மெ. சுந்தரம் அவர்களும் திரு.பு. மனோகரன் அவர்களும் (எழுத்தாளர் மன்றப்புரவலர்) தனிக்குழு ஒன்று அமைத்து நன்கொடை தண்டி மணிவிழாவைச் சிறப்பாக நடத்துவது என ஏற்றுக் கொண்டனர்.

தலைவர் கருமுத்து தி. சுந்தரம்

-

செயலர்-ப-ர்.மெ. சுந்தரம்

துணைச்செயலாளர் - கருணைதாசன்

பொருளாளர் - பு. மனோகரன்.

எனக்குழு அமைந்தது; உறுப்பினர்களும் தெரிந்தெடுக்கப் பட்டனர். குழு தன் கடமையை ஆற்றிய வகையையும், அதன் பட்டறிவையும் துணைச்செயலாளர் கூறுகிறார்.

வள்ளல்கள் என

"வேண்டுகோளை அச்சாக்கிக் குறிப்பிட்ட பெரியார் களுக்கு அஞ்சலில் விடுத்தோம். நாளிதழ்களில் செய்தியை வெளியாக்கினோம். பாவாணரின் குடும்ப நலனுக்காக அன்றி, பொத்தகங்களை வெளியாக்குவதற்காக யார்யாரைத் தாளாளர்கள் எண்ணி எதிர்பார்த்தோமோ அவர்கள் காற்றடைத்த பைகள் போன்று தமிழகத்தில் உலாவுகின்றன என்பதை அறிந்தோம். இக்குழுவுக்குப் பணம் அளித்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று கணக்குப் பார்க்கும் வட்டிக்கடையர் போன்று தமிழின் பெயரால் வெற்றுத் தோற்றமளிக்கும் பலரை உணர இக்குழு ஒருவாய்ப்பாக இருந்தது" என்பது அது.

ப-ர். மெ.சு.அவர்களின் பேராற்றலால் த. பி. சொக்கலால் குழும்பினர், 2500 உரூபா தந்ததால் 'The Primary Classical Language of the world' என்னும் நூல் முக்கூடலில் சிறப்பாக வெளியிடப்பட்டது.