உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

133

பாவாணரை நினைக்கும் போது அவரது தமிழ்த் தொண்டும் வீறு கொண்ட உருவமும் முறுக்கி விடப்பட்ட மீசையும் தமிழ்ப்பகைவர் கண்டு நடுங்கும் தோற்றமும் என் கண்ணெதிரே நிற்கின்றன. தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழகத்தின் எதிர் காலத்திற்கும் பாவாணர் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டும் வகையில் இவ்விழா கொண்டாடப் பெறுகின்றது.

தமிழ் வளர்த்த சேர சோழ பாண்டிய மன்னர்களின் வழியைப் பின்பற்றித் தமிழ் அறிஞர்களின் வழியைப் பின்பற்றித் தமிழ் அறிஞர்களுக்குத் தலைவணங்கி மரியாதை செலுத்து கின்றோம்.

தமிழ்ப்பாவை

மு. கருணாநிதி

8-9-67 இல் மதுரையில் மணிவிழா நிகழ்ந்தது. திரு. கி. ஆ.பெ. விசுவநாதம் விழாத்தலைமை ஏற்றார். ப-ர்.மெ.சுந்தரம் வரவேற்றார். கருமுத்து தியாகராசர், கலைஞர் கருணாநிதி, குன்றக்குடி அடிகளார், அமைச்சர் முத்துசாமி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். பாவாணர் அவர்கள் விழாவுக்கு வாராமையால் பொருளாளர் மனோகரனார் வழங்கிய பொற்கிழியைக் கலைஞர் விழாத் தலைவரிடம் வழங்கினார். மெ. சந்தரம் 'மொழிநூல் மூதறிஞர்' எனப் பட்டம் பொறிக்கப்பட்ட தட்டத்தைத் தலைவரிடம் வழங்கினார். மன்றச் சார்பிலும், மணி விழாக் குழுச் சார்பிலும் பராட்டிதழ்கள் படிக்கப் பட்டன.

66

'ஒரு சொல்லைக் கேட்டவுடன் ஓராயிரம் சொற்கள்

அருவியெனப் பொழிகின்ற அனைத்துமொழிப் பெருஞ்செல்வ!”

"தாய்வாழ மருந்துண்ணும் சேய்போலும் வாழ்வுடையாய் ஆய்தமிழுக் காட்பட்டோர் வ்ாழஇனும் வழியிலையோ'

66

“அமிழ்தாம் மொழிவளர அனைத்தையும்நீ தந்து யர்ந்தாய்

தமிழ்த்தாயின் தண்ணருளால் தழைத்தென்றும் வாழியவே”

என்பவை வாழ்த்து மடலில் முக்கண்ணிகள்.

விழாநாயகர் இல்லாலே விழா நிகழ்ந்ததா? ஆம்! திட்டமிட்டபடி நிகழ்ந்தது. பாவாணர்ஏன் விழாவில் கலந்து கொள்ளவில்லை?