உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பாவாணர்க்கு விடுத்த அழைப்பிதழ் 9-9-67 இல்கிடைத்தது. விழாநாள் 8-9-67 ஆயிற்றே!

'இன்று சென்னையினின்று திரும்பப்பெற்ற அழைப்பிதழ் இங்கு வந்து சேர்ந்தது. என்பயன்? ஒருவரா இருவரா, சிறுவரா, எளியரா,விழாவில் என்னைச் சிறப்பிக்க வந்தவர் எத்துணைப் பெரியார், எத்துணை அரிய நேரத்தை எனக்காகச் செலவிட்டனர். இங்ஙனம் பலபெரியார் ஒன்று கூடல் எளிதா? நான் வராமையால் என்னைப் பற்றி அவர் எத்துணையோ தவறாகக் கருதி என்னை வெறுத்துமிருப்பரே! இவ்விழா ஏற்பாட்டிற்கு எத்துணை காலமும் முயற்சியும் தங்கட்குச் சென்றன. அவ்வளவும் வீணாயிற்றே!'

இதையெல்லாம் நினைக்கும் போது என் நெஞ்சம் எத்துணைப் புண்படுகிறது. பிறபுலவர்க்குப் பெரியவர்பல சேர்ந்தால் அதில் வியப்பொன்றுமில்லை, எளிய நிலையில் இருப்பவனும் முகமன் கூறிப் பிறரைப் புகழும் இயல்பில்லா தவனும் புலவரும் விரும்பாத தனித்தமிழ் நடையினனும் ஆரியத்தை வன்மையாய் எதிர்ப்பவனும் ஆகிய என்னைப் பாராட்டப் பலர் கூடினார் எனின் அது வியப்பினும் வியப்பாம் என்கிறார் பாவாணர். (9-9-67 வி. அ. கருணை).

18-9-67 இல் எழுதிய மடலில், "தமிழக அரசினரும் பல்கலைக் கழகங்களும் செய்ய வேண்டிய பணி தனிப்பட்ட தமிழன்பர் வாயிலாக நிறைவேற வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம் போலும்' என்றும்,

"எனக்கும் தனித்தமிழ்க்கும் இத்தொகை தொக்க தெனின், அது தொகுத்தாரின் பெருமுயற்சியையன்றித் தந்தாரின் தனித்தமிழ்ப் பற்றைக் குறித்து விடாது" என்றும்,

விழாவிற்கு நான் வராமை ஒரு வகையில் எனக்குப் பொந்திகையே (திருப்தியே) அளிக்கின்றது. நேசனைக் காணாவிடத்து நெஞ்சாரவே துதித்தல், ஆசானை எவ்விடத்து மப்படியே வாச, மனையாளைப் பஞ்சணையில்மைந்தர்தமை நெஞ்சில், வினையாளை வேலை முடிவில்" (ஔவையார்) என்றும் குறிப்பிடுகின்றார்.

-

"என் மதுரை மணிவிழா அழைப்பிதழ் விழாவிற்கு மறுநாள் தான் கிடைத்தது. அதனாற் போக இயலாது போயிற்று. சென்ற