உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

135

காரிசென்று ஞாயிறு பெற்றுத் திங்கள் திரும்பினேன்" என்று சேலம்சின்னாண்டார்க்கு 11-10-67 இல் வரைகின்றார் பாவாணர். பாவாணர்மணி விழாவின் போது ஒரு நற்செய்தி வெளிப்படுகின்றது: அது, "மொழிநூல் மூதறிஞர் பாவாணரின் சொற் பிறப்பியல் அகரமுதலியை வெளியிடக் காரைக்குடித் தமிழ் வள்ளலும் இராமசாமித் தமிழ்க் கல்லூரித்தாளாளருமாகிய திரு. இராம. பெரிய கருப்பனார் மனமுவந்து இசைவளித்துள்ளார்கள் என்னும் நற்செய்தியைப் பாவாணரின் மணிவிழாச் செய்தியாக நன்றியுடன் வெளியிடு கின்றோம். பாவாணர் அவர்களும் முனைந்து விரைவில் எழுதி முடித்துத் தருவதாக இருக்கிறார்கள். அந்நூல் தமிழகத்தின் சிறந்த பொக்கிசமாக அமைய விருக்கிறது. நல்லுள்ளத்தோடு அப்பணியை ஏற்றுள்ள அப்பெரு மகனார்க்குத் தமிழ் உள்ளளவும் நன்றி நிலைத்து நிற்கும் என்று பெருமையோடு கூறிக் கொள்கின்றோம்" என்பது. (தமிழ்ப்பாவை. பாவாணர் மணிவிழாச் சிறப்புமலர் (7-10-67) தென்மொழி அகரமுதலித் திட்டத்திற்கு முன்மொழித் திட்மன்றோ ஈது! ஏன் தடையுற்றது? பறம்புமலைப் பாரிவிழாவில் பாவாணர்க்குச்

'செந்தமிழ் ஞாயிறு'

என்ற சிறப்புப் பெயர் சூட்டிப் பாராட்டுதல்: தவத்திரு. குன்றக்குடி அடிகளார் : இன்றைப் பாரிவிழாவில் 'செந்தமிழ் ஞாயிறு' எனச் சிறப்பிக்கப் பெறுபவர் ஞா. தேவநேயப் பாவாணர்.

பாவாணர் ஒரு பைந்தமிழ் ஏறு; தனித்தமிழ் ஆறு; வடமொழிப் பகைகெடுக்கும் கூர்வேல்; நுண்மாண் நுழை புலத்தின் திருவுரு; அவர்தம் எழுத்தும் பேச்சும் தமிழைக்காக்கும் படை; அரண்!

உலக மொழிக் கூட்டங்களுள்தமிழே தலையாயது; தனிச் சிறப்புடையதென்று இன்று எடுத்தோதும் தனித் தமிழ் வலவரைச் 'செந்தமிழ் ஞாயிறு' எனப்போற்றுதும்!

இஞ்ஞாயிறு தோன்றி விளங்குதல் மூலம் வடமொழிப் பனி மூட்டமும் இந்திக் கருமேகமும் இரிந்தோடும். பாவாணர் தனித்தமிழ் மரபுக்கேற்பச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியற் பேரகரமுதலி தொகுக்க விரும்புகிறார். அதற்குரிய புலமை அவரிடத்தில் உண்டு; ஆனாலும் பொருளில்லை. புரவலர் மாவண் பாரியென விளங்கும் கலைஞர்கையில்இந்தச் செந்தமிழ்