உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

ஞாயிற்றினை

இளங்குமரனார் தமிழ் வளம் - 23 ஒப்படைக்கின்றனம்.

அரசியல்

உலகில்

எழுஞாயிறு எழுச்சி தந்ததைப் போல, மொழி உலகில் இஞ்ஞாயிறு எழுச்சியினைத்தந்து அன்னைத் தமிழைக்களை களினின்று என்றும் காத்து அதன் இயற்கைப் பசுமையினைக் காக்கும்! வாழ்க பாவாணர்! வாழ்க அவர்தம் தமிழ்த் தொண்டு!

5-5-71 முதன்மொழி க;2-7-71.

சேலம் தமிழ்ப் பேரவை பாவாணர் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி வெள்ளித் தட்டமும் திராவிட மொழி நூல் ஞாயிற்று என்னும் பட்டமும் வழங்கிச் சிறப்பித்தது. 1955 ஆம் ஆண்டு என்பது பாவாணர்எழுத்து. 1957 என்பது புலமை. -சூன். 1981. பக். 122. இவ்விழாத் தலைமை ஏற்றவர் தந்தை பெரியார்.

1960 இல் தமிழ்நாட்டு அரசு சார்பில் ஆளுநரால், பாவாணர் தம் ஆட்சித்துறைக் கலைச்சொல்லாக்கம் குறித்துப் பாராட்டிச் செப்புப் பட்டயம் வழங்கப்பட்டது.

1970 இல் பாவாணர் சொல்லாய்வு நலம் பாராட்டிச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெள்ளித்தட்டம் வழங்கிப் பட்டுப் போர்த்திப் பாராட்டியது.13-7-74 இல் சென்னை மாநகர மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலைவாணர் அரங்கில் நடத்திய முத்தமிழ் மாநாட்டில் தமிழ் ஞாயிறு பண்டித புலவர் தேவநேயப் பாவாணர் எம்.ஏ., அவர்கட்கு ஒரு பாராட்டு விழா சீரும் சிறப்புமாக நடத்தினர். விழாவிற்குத் திரு.ஏ.எல். சீனிவாசன் தலைமை தாங்கினார். பாவாணர் அவர்களைப் பாராட்டித் தமிழ்ப் பேரறிஞர் பலர் உரையாற்றினர். பாவாணர் அவர்கட்கு டாக்டர்கலைஞர் அவர்கள் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தனர். அப்போது, "பாவாணரவர்களுடைய தமிழாற்றலை ஆராய்ச்சித் திறனை அறிவு நுணுக்கங்களை இந்தத் தமிழ்ச் சமுதாயம் பெற வேண்டும் என்பதற்காக அவரைப் பயன்டுத்தி ஒரு வேர்ச்சொல் அகரமுதலியைத் தயாரிக்கும் பொறுப்பினை இந்த அரசு அவரிடம் ஒப்படைத்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

செந்தமிழ்ச் செல்வர் விருது

செந்.செல்.48:662

1979 ஆம் ஆண்டு சனவரித்திங்கள் 15 ஆம் நாள் திருவள்ளுவர் நாளன்று வள்ளுவர்கோட்டத்தில், தமிழுக்குத்