உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

137

தொண்டு செய்த பெருமக்கள் ஐவருக்குச் 'செந்தமிழ்ச் செல்வர்' என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது அரசு. அப்பட்டம் பெற்றவருள் ஒருவர் பாவாணர்; பிறர், தி.சு. அவிநாசிலிங்கனார். கா. அப்பாத்துரையார். ம.ப. பெரியசாமித்தூரன், வ. சுப்பையா என்பவர். முதல்வர் ம. கோ. இராமச் சந்திரனார் பொன்னாடை போர்த்தி நினைவுத் தட்டமும் விருதும் வழங்கினார். விருது விளக்கச் செய்தி வருமாறு:

மொழிஞாயிறு என்றும் மொழிநூல் மூதறிஞர் என்றும் தமிழ்ப்பெரு மக்களால் போற்றப்பெறும் பேராசிரியர் ஞா. தேவநேயப்பாவாணர் நெல்லை மாவட்டத்தில் 7-2-1902 அன்று கணக்காயனார் ஞானமுத்தனார்க்கு நன்மகனாகப் பிறந்தவர்.

பாளையங்கோட்டையில் சி. எம். எஸ். என்னும் திருச்சபை விடை யூழியக் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றபின் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வு தேறித்தனிக் கல்வியால் சென்னைப் பல்கலைக் கழக முதுகலைப்பட்டமும் பெற்று, பல உயர்நிலைப் பள்ளிகளில் தலைமைத் தமிழாசிரியராகவும் சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

1922இல் தமிழாசிரியப்பணி ஏற்றதில் இருந்து மொழிநூல், வரலாற்று நூல், மாந்தநூல் ஆகிய முத்துறை நூலடிப்படையில் தமிழாய்ந்து, குமரிநாட்டுத் தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத் திற்கு மூலமுமாகும் என்னும் உண்மைகண்டு அதை விளக்கு முகமாகப் பல ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

பன்மொழி வல்லுநரான பாவாணர் அவர்கள் மொழியியல் துறையில் ஒப்பற்ற தனித்திறம் வாய்ந்தவரென்று மறைமலையடி களாரால் சான்றளிக்கப்பெற்ற சிறப்புடையவர். அடிகளார் நெறியில் நின்று தமிழ்ப்பணியாற்றும் இவர் தம் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்றவர் உள்ளனர்.

தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழி என்னும் உண்மையைத் தம்புலமைத் திறனால்நிறுவிக் காட்டிவரும் இப்பேராசிரியர் 8-5-1974 அன்று தமிழ் நாட்டு அரசால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக