உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பதிப்பகம்

நெறிமுறைகள்

தோற்றுவாய்: மொழிநூன் மூதறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் உயிருடன் வாழ்ந்தபோதே அவர் எழுத விரும்பிய நூல்களை உடனுக்குடன் அச்சிட்டு வெளியிடும் ஏந்தின்மை யால் பல நூல்கள் அவரால் எழுதப்படாமலும், எழுதப்பட்ட சில நூல்கள் கையெழுத்து வடிவிலேயே அழிந்து போகவும் நேர்ந்தன. அச்சாகி வெளியானவையும் கிடைப்பதுமில்லை! பாவாணரின் மொழியாய்வு பற்றிய திறனாய்வுகள் அறிஞர்கள் மட்டுமே வாங்கிப் படிக்கக் கூடியவையாதலால் அத்தகைய நூல்களை எழுதுவாரும் துணிந்து வெளியிடுவாரும் அரிதாகின்றனர். பாவாணர் கொள்கைகளை அரண் செய்வனவும், தனித் தமிழின் பல்துறை சார்ந்தனவுமான நூல்களை வெளியிட வேண்டிய தேவை மிகுந்து வருகின்றது. இவற்றையெல்லாம் குறைந்த அளவிலேனும் உடன் நிறைவேற்றக் கருதிப் பாவாணர் பதிப்பகம் தோற்றுவிக்கப் பெறுகின்றது.

நோக்கம் :

1.

2.

3.

பாவாணரின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடுதலும், நூல்களை மறுபதிப்புச் செய்தலும் அவற்றின் பிற மொழியாக்கங்களை வெளியிடுதலும்!

பாவாணர் கொள்கைகளைப் பரப்பும் வகையில் அவர் தம் மொழியாய்வு பற்றிய திறனாய்வுகளை ஊக்குவித்து வெளியிடுதலும்.

பாவாணர் கொள்கைகளுக்கு உட்படுவனவும் அரண் செய்வனவும் தனித்தமிழ் வளர்ச்சி குறித்தனவுமான பல்துறை நூல்களை வெளியிடுதலும்;

பாவாணர் பதிப்பகத்தின் நோக்கங்கள் ஆகும்.