உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. அறிவிப்பும் அறைகூவலும்

என்தமிழ்த்தொண்டு இயன்றது எங்ஙனம்?

1938 இல் நான் திருச்சிப்புத்தூர் ஈபர் மேற்கண்காணியார் உயர்நிலைப்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியனாக இருந்த போது திரு(சி) அரச கோபாலாச்சாரியார் தமிழ்நாட்டு முதலமைச்சராகி இருநூறு உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தினார். உடனே தமிழர் எதிர்ப்பு எழுந்தது. இந்திபுகுத்தப்பட்ட பள்ளிகட்குமுன் மறியல் செய்த தமிழ்த் தொண்டர் சிறையில்இடப்பட்டனர். பெரியாரும் அதற்காளாயினார். முறைப் பட்டதமிழ்க்காப்பு, வகுப்பு வேற்றுமைக் கிளர்ச்சியாகத் திரிக்கப்பட்டது. சிறைத் தண்டனை யுற்ற தமிழ்த் தொண்டரின் தற்காப்பிற்காக ஒப்பியன் மொழி நூல் முதற்புத்தகம் முதற்பாகம் என்னும் நூலை எழுதினேன். ஆயின், அதனை வெளியிடத் தமிழ்ச் செல்வரும் தமிழ்க் கட்சித் தலைவரும் முன் வரவில்லை; சிறுதொகையும் உதவவில்லை. அதனால் என் அடங்காத் தமிழ்ப்பற்றும் மடங்காத் தன்மானமும் என் கைப்பொருள் கொண்டு அதனை வெளியிட்டு ஓராயிரம் ரூபா இழக்கச் செய்தன. அங்ஙனந் தாங்கொணாச் சூடு கண்டதினால் அதன்பின் என் சொந்தச் செலவில் எத்தகைய நூலையும் வெளியிட மிகவும் அஞ்சினேன். துணிந்து வெளியிடப் பொருளும் என்னிடமில்லை.

அந்நிலையில்

லக்கணம் சொல்லாராய்ச்சி மொழி யாராய்ச்சி அரசியல் வரலாறு விளையாட்டு முதலிய இலக்கியப் பொருள்பற்றியனவும், புலமக்களன்றிப் பொது மக்கள் வாங்காதனவும், விரைந்து விலையாகாதனவும் ஆரிய வெறியர்க்கு மாறானவும், வெளியீட்டிற்குப் பெருஞ்செலவு செய்ய வேண்டியனவும் சிறியவற்றோடு பெரியனவுமான இயற்றமிழ் இலக்கணம், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திராவிடத்தாய், சுட்டு விளக்கம், முதற்றாய்மொழி, பழந் தமிழாட்சி, மாணவர்