உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

உயர்தரக்கட்டுரை இலக்கணம் (2பாகம்), என்னும் எண்ணூல் களோடு, நான் ஏற்கனவே வெளியிட்ட கட்டுரை வரைவியல் என்னும் நூலையும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சி மேலாளரான தாமரைத்திரு. வ. சுப்பையாப்பிள்ளை அவர்கள் வாரமுறையில் ஒவ்வொன்றாக வெளியிட்டு விற்புவிலையில் ஒப்பந்தத்திற்கேற்ப உரிமைத்தொகை யும் ஆண்டிற்கிருமுறை கணித்து ஒழுங்காக அனுப்பி வந்திருக் கின்றார்கள். இதனால் நான் ஒருபோதும் வெளியிட்டிருக்க முடியாத பல அரியநூல் வெளிவந்து என் பெயர் உண்ணாடும் வெளிநாடும் பரவியதுடன் என்தமிழ்த் தொண்டும் பலமடங்கு சிறந்து வந்திருக்கின்றது. அவர்கள் ஒப்பந்தப்படி விடுத்து வந்த அரையாட்டைத்தொகை என் குறைந்த சம்பளக் காலத்தும், வேலையில்லாக் காலத்தும் பெரிதும் உதவிய தென்பதை நான் சொல்ல வேண்டுவதில்லை. அதோடு அவ்வப்போது நான் செந்தமிழ்ச் செல்விக்கு விடுத்த வேர்ச்சொல்பற்றிய என் உரிமைக் கட்டுரைகட்கும் அவர்கள் அளித்து வந்த அன்பளிப்புத் தொகை எனக்குப் பேருதவியாயிருந்த தென்பதைச் சொல்லாமல் இருத்தற்கில்லை.”

னி அவர்கள் என்சொந்த வெளியீடான தமிழ் வடமொழி வரலாறு, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல், திருக்குறள் தமிழ் மரபுரை என்னும் நூல்கள் அச்சான போதும், மறைமலையடிகள் நூல் நிலையத்தில் தங்க இடம் தந்தும், இறுதிப்படிவ மெய்ப்புக்களையெல்லாம் மூலத்துடன் ஒப்பு நோக்கிப் பொறுமையாகவும் செவ்வையாகவும் திருத்திக்கொடுத்தும், அச்சானவுடன் அழகாகக் குறித்த காலத்திற்குள் கட்டடம் செய்வித்தும் அனுப்பச் சொன்ன இடங்கட்கெல்லாம் தப்பாது அனுப்புவித்தும் வேண்டும் போதெல்லாம் வேண்டிய அளவு கடன் தந்துதவியும் பல்வேறு வகையிற் செய்து வந்த உதவியும் வேளாண்மையும் முற்றச் சொல்லுந்திறத்த அல்ல.

இங்ஙனம் பலவகையிலும் என் தமிழ்த் தொண்டை இயல்வித்து மும்மொழிப் புலமை செம்மையிற்பெற்ற நிறைபுல முடியாம் மறைமலையடிகள்ளும் என்னை உளமுவந்து பாராட்டு மாறு செய்த திரு. வ.சுப்பையாப் பிள்ளை அவர்கட்கு நான் செய்யக் கூடிய கைம்மாறு, உலகத் தமிழ்க கழக உறுப்பினரையும்