உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

141

ஏனைத் தமிழன்பரையும் என்றும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளையே வாங்கியும் வாங்குவித்தும் அவர்கள் வெளியீட்டுக் கலை வெற்றியை வியந்தும் நயந்தும் இன்னும் கழிபல்லாண்டு கட்டுடம்புடன் வாழ்ந்து அவர்கள் தங்கள் செந்தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து செய்யுமாறு ஊக்கிவர வேண்டுமென்று ஆர்வத்துடன் வேண்டிக் கொள்வதே யன்றி வேறன்று.

“சைவசித் தாந்தநூல் சார்பதிப்ப கம்வாழி தெய்வத்திருவள் ளுவம்வாழி - செய்வெற்றிச் சுப்பையா வாழி சொரிமுகில் நீடூழி

தப்பாது வாழி தமிழ்.”

(1969-70) செந்.செல்.44 : 217-220

தொண்டின் துணையைக் கண்டுரைத்தது இது.

சூடுகண்டவிளத்தம்

"எதிர் நீச்சலில் துணிந்து முதன்முதல் ஒப்பியன் மொழி நூலை வெளியிட்டார். தாள் கடன் உரூபா. 150 அச்சுக்கூலி உருபா. 60-க்குத் தொல்லைப்பட்டார். பலமுறை செய்தித் தாள்களில் அறிக்கையிட்டார். உதவுவார் இல்லை. அடியேன் அச்சுக்கூலி உருபா 60 கொடுத்து வெளிக்குக் கொண்டு வந்தேன். தமிழ் வள்ளல்களை எல்லாம் அண்டினேன்; பயன் இல்லை; முடிவில் எங்கள் தென் மாபட்டி வைக்கம் வீரர் வாசக சாலைக்கு வந்தபெரியார் அவர்களிடம் உருபா 150 வாங்கிக் கொடுத்துத்தான் வாங்கிய கடனையும் தீர்த்தேன். நான் கொடுத்தஉருபா 60க்கு 40 பொத்தகம் தந்தார். அதேபோல் பெரியாருக்கும் 100பொத்தகம் கொடுத்தார்.நான் வாங்கிய 40 பொத்தகம் விற்க 4 மாதம் ஆகியது. அதில் அறிஞர் அண்ணாவுக்கு ஒன்று; சம்பத்து ஈழத்து அடிகள் ப. சீவானந்தம் ஆகியோருக்கு ஆளுக்கு ஒன்றாகச் சமேரசம் பேட்டை சுயமரியாதைமாநாட்டில் கொடுத்தேன். ஒருபொத்தகக் கடைக்காரரும் பதிப்பகத்தாரும் இந்நூலை வாங்க முன் வராததோடு அஞ்சவும் செய்தனர். அவ்வளவு தமிழ் மணம், ஆரியத்தாக்குதல். மதுரை இ. மா. கோ. நிறுவனத்தார் இந்தப் பொத்தகம் படுத்துவிடும்என்றார்கள்." என்கிறார் திருப்பத்தூர் தொ. வீ. இரா. தொந்தியபிள்ளை.

து, பாவாணர் சூடுகண்டதன் விளத்தமாம்.