உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மதிப்புரைக்கு மறுப்புரை

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளைப் பற்றி இந்துத் தாளில் சுப்பிரமணிய சாத்திரியார் ஒரு மதிப்புரை எழுதினார். அஃது ஒருபால் போற்றியும் ஒருபால் தூற்றியும் வந்த மதிப்புரை. அதனைப் படித்த அன்பர் ஒருவர் அதற்கு மறுப்பெழுத ஏவினார் பாவாணரிடம்; அதனைப் பொருட்டாக எண்ணாமல் விடுத்தார் பாவாணர்.

பின்னர்ப் ‘பாணர் கைவழி' என்னும் நூலுக்கு ஒரு மதிப்புரை (மறுப்பரை). வரஅதனை மறுத்துரைத்தார் பாவாணர். முன்னே வலியுறுத்திய நண்பர் மீண்டும் பாவாணரிடம் வந்து 'ஐயா ஏனையர் இயற்றிய நூல் பற்றி எழுந்த மதிப்புரைக்கு மட்டும் மறுப்புரை விடுத்தீர்களே. ஏன் தாங்கள் இயற்றிய சொல்லா ராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரைக்கு இன்னும் மறுப்புரை விடுக்கவில்லை.' இதனால் திருவாளர் சுப்பிரமணிய சாத்திரி யாரவர்கள் வரைந்த மதிப்புரை சரியானதே என்றும் தங்கட்கு அதை மறுக்கும் மதுகையில்லை யென்றும் அல்லவா படும்? என்று மானவுணர்ச்சி தோன்றுமாறு பன்முறை வற்புறுத்தியதால் மறுப்புரை வரைந்தார் பாவாணர்.

அந்தணர் என்பார் ஒருகுலத்தார் அல்லர்; முனிவர் என்றும், பத்தினி என்பது பத்தன் என்பதன் பெண்பாற் சொல் என்றும், எழுத்து என்பதன் பகுதி எழு என்பதேயன்றி எழுது என்பதன்று என்றும், இன்னவாறு சுட்டி, தக்க சான்றுகளால் நிறுவினார்.

ஆசிரியர் மொழியொலி நூல் (Phonology) சொல் வடிவு நூல் (Morphology) பொருட் பாட்டு நூல் (Semasiology) ஆகியவற்றைப் பயின்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று சாத்திரியார் குறிப்பிடுவதற்கு,

"கடந்த இருபானாண்டுகளாக மொழிநூலில் மூழ்கிக் கடந்த எனக்கு மீன்குஞ்சுக்கு நீச்சுப் பயிற்றுவது போலும், கொல் தெருவில் குண்டூசி விற்பதுபோலும் சாத்திரியார் அவர்கள் மொழிநூல் துறைகளையுணர்த்த விரும்பியது மிகவியப்பை விளைக்கின்றது."

"பார்ப்பான் தமிழும் வேளாளன் கிரந்தமும் வழவழா கொழ கொழா" என்பது ஒருபுறமிருக்க, வடமொழியை இயன்மொழியாகவோ, தமிழுக்கு முந்திய மொழியாகவோ