உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

முறைப்படி முன் நிகழ்ந்த மாவட்டத்திலேயே மீண்டும் மீண்டும் ஆட்டை விழா உரிய காலத்தில் நிகழவேண்டும்.

விழா ஒருமுறை ஒரு மாவட்டத்தில் நிகழினும் எல்லா மாவட்டமும் சேர்ந்தே அதை நிகழ்த்தும். மாநாட்டு வரவுக் கணக்கில் தொங்கல் விழுவதைச் சரிக்கட்டும் மிகைப் பொறுப்பே, விழா சுழற்சி முறைப்படி நடைபெறுவதால் இச்சிறப்பு நிலைமையும் எல்லா மாவட்டத்திற்கும் பொதுவானதே. ஆதலால், ‘எங்கெழி லென் ஞாயிறெமக்கு' என்றிருத்தல் கூடாது.

தனிப்பொறுப்பில் விழாச் செலவை ஏற்றுக் கொள்ளக் கூடிய கோடிச் செல்வரோ இலக்கச் செல்வரோ நம் கழக உறுப்பினராயினமையால் பெரும்பாலும் செல்வநிலை தாழ்ந்த வரிடமே விழாச்செலவிற்குப்பணந்தண்ட வேண்டியுள்ளது. ஆதலால் ஒவ்வொரு மாவட்ட அமைப்பாளரும் 200 உருபாவிற்குக் குறையாது விழாத்தொறும் தண்டித்தரல் வேண்டும் என்றும் விழாநிகழ்த்தும் மாவட்ட அமைப்பாளர் எச்சச் செலவுப் பொறப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முன்னரே நெறியிடப்பட்டுள்ளது.

ஆதலால் மாநாட்டு நிகழ்விற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஒவ்வொரு மாவட்ட அமைப்பாளரும் 200 உருபாவிற்குக் குறையாது தண்டி உ.த.க. பொருளாளர் திரு. செந்தமிழ்க் கிழார்க்கு அனுப்பி விடுதல் வேண்டும். ஆண்டு முழுவதும் பணம் தண்டாமலே இருந்து மாநாட்டின் போது பதவியினின்று விலகிக் கொள்வது இருமடிக் குற்றமாகும்; பதவியினின்று விலகுபவர் ஆண்டுத் தொடக்கத்திலேயே விலகிக் கொள்ளல் வேண்டும். பணந் தண்டாதவர் அல்லது கொடாதவர் ஆட்சிக்குழுக் கூட்டத்திற் பார்வையாளராக இருக்கலா மேயன்றி, நடவடிக்கையிற் கலந்து கொள்ளக் கூடாது. பணந்தண்டும் ஆற்றலில்லாதவர் தாமாகப் பதவியினின்று விலகிக் கொள்வது கண்ணியமாகும்.

இனிமேல் நடைபெறும் ஆட்டை விழாவெல்லாம் 'திசம்பர்' என்னும் ஆங்கிலமாத இறுதிக்காரி, ஞாயிறே நிகழும். ஆதலால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே மாவட்ட அமைப்பாள ரெல்லாரும் தம் பங்குச் செலவுப் பணத்தை உத.க. பொருளாளர்க்கு அனுப்பிவிடக் கடவர்.

YGOLDITY 1:3; 15-2-71.

ஞா. தேவநேயன்

உ.த.க. தலைவன்