உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

வெளிப்படைக் கடிதம் (An open letter)

149

கருநாடக மாநில முதல்வர்மாண்புமிகு வீரேந்திரப்பட்டீல் அவர்களுக்குப் பாவாணர்வெளிப்படைக் கடிதம் ஒன்று ஆங்கிலத்தில் விடுக்கிறார். "வாத்தல் நாகராசு என்பார் (சட்டமன்ற உறுப்பினர்) தமிழகத்தொடு சேர்ந்துள்ள தாளவாடியைக் கன்னட நாட்டொடு சேர்க்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்து வன்முறை யாளரொடு தாளவாடியுள் புகுந்தார். தமிழர்க்கு இன்னல் விளைத்தார். அவரைத் தமிழ் நாட்டரசு சிறை வைத்தது. அவரை விடுவிக்கப் பட்டீல் முயன்று கொண்டிருக்கும்போதே, வன்முறைக் கும்பல் வெங்காலூர்க் கடைவீதியிலும் குடியிருப்பு களிலும் உள்ள தமிழர்களையும் சுற்றுலாச் சென்ற தமிழர் களையும் கண்மூடித்தனமாகத் தாக்கிப் பேரழிவும் பேரிழப்பும் செய்வித்தது. இதனைக் கண்டு கொள்ள முயலாத பட்டீல், நாகராசு சிறை வீட்டுக்கு முயன்றது போல் அதில் வெற்றி கண்டதுபோல், தமிழர்க்குப் பாதுகாப்பு ஏன் தரவில்லை. (8-5-70) உ.த.க. என்பது தமிழ்க்காப்பு தமிழ் வளர்ப்பு பற்றிய அமைப்பு மட்டுமன்று,தமிழினக் காப்பு அமைப்புமாம் என்பதை மெய்ப்பித்தவர் பாவாணர். அவ்வாறே ஈழச்சிக்கலில் தமிழர் உரிமை ஒறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட நிலையில் கொதிப் படைந்தவரும் பாவாணர். அவருணர்வே உ.த.க. அன்பர்கள் உழுவலன்புடன் உயிருரிமை உணர்வுடன் ஈழப்போராளிகளுக்கு உதவும் எழுச்சியாகக் கிளர்ந்ததாகும்! சங்கச் சான்றோர் செய்த அமைதிப் பணிகள்,தூச் செலவுகள், இடிப்புரைகள் இன்னவற்றைப் பயில்வார் பாவாணரைச் சங்கச்சான்றோர் வரிசையராக எண்ணுவர் என்பது தெளிவு. உ.த.க மாவட்ட அமைப்பாளர்க்கு உடனடி வியங்கோள்

உ.த.க. மாவட்ட அமைப்பாளர் பலர் தம் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

-

ஆட்டை விழா அல்லது மாநாடு ஏதேனும் ஒரு மாவட்டத் திற்குச் சிறப்பாகவோ நிலையாகவோ உரியதன்று. எல்லா மாவட்டங்கட்கும் அல்லது தமிழகம் முழுவதற்கும் பொதுவான தாகும். ஏதேனுமொரு முறைப்படி ஆண்டுதோறும் ஒரு மாவட்டத்தில்தான் ஆட்டைவிழா நிகழ்தல்கூடும். சற்று முறைப்படி ஆண்டுதோறும் ஒரு மாவட்டமாக எல்லா மாவட்டங்களிலும் ஆட்டை விழா நடைபெற்றாதல் வேண்டும். அதன்பின் சுழற்சி