உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

157

கூட்டலாம் என்றும், அதற்கு இந்தியாவின் உயர் நெறி மன்ற நடுவர்களையோ குடியரசுத் தலைவரையோ கூட நடுவர்களாக அமைக்கட்டும் என்றும், தாம் ஒருவரே தமிழ் தொன்மை வாய்ந்தது என்றும், தமிழனின் பிறந்தகம் குமரிக் கண்டமே என்றும், தமிழனின் பிறந்தகம்குமரிக் கண்டமே என்றும் நிறுவுவதாகவும், தம்கருத்துக்கு எதிர்க்கருத்தை எவரும் எடுத்துக் கூறலாம் என்றும் அதன்பின் தீர்ப்புக் கூறட்டும் என்றும், அதன்பின் எவரும் இக்கருத்துப்பற்றி வாய் திறக்கக்கூடாது என்றும் சூளுரைத்துப் பேசினார். முற்பகல் நிகழ்ச்சி அவ்வளவில் நிறைந்தது. பிற்பகலில், திருக்குறள் பெருமாள் பாவேந்தர் தமிழுணர்வுப் பாடல்கள் பாடினார். வ.சுப. மாணிக்கனார் விரிந்ததோர் உரையாற்றினார். கோவை கோ. துரைசாமி, பாவலர் பெருஞ்சித்திரனார் ஆகியோர் பேசினர். காஞ்சி ஞானப்பிரகாச அடிகள் கட்டுரையும், பர்.தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அறை கூவலுக்கு மறுமொழியாக விடுத்த முடங்கலும் இறைக் குருவனாரால் படிக்கப்பட்டன. விழாத்தலைவர் திரு. நீ. கந்தசாமி 'தமிழன் பிறந்தகம் குமரி நாடே' என்னும் உண்மையை உறுதி செய்து நிலை நாட்டிக் கருத்தரங்கை முடித்துவைத்தார். தமிழன் பிறந்தகம் குமரி நாடே என அவையோர் அனைவரும் ஒருமுகமாக முழங்கினர். மாநாட்டுச் செயலாளர் சா. அடலெழிலனார் நன்றி கூறு மாநாடு இனிதே நிறைவுற்றது. (தென்மொழி சுவடி10) தமிழன் பிறந்தகத் தீர்மானம்பற்றிப் பாவாணர் கடிதங்களில் பல செய்திகள் உள. தமிழ் இலக்கிய வரலாற்று நூலின் முகப்பில், 'தமிழாரியப் போராட்டப் பட்டிமன்ற நடுவர் பெயர்ப்பட்டி' ஒன்றுண்மையும் அறிக. இந்தித்திணிப்புப் பற்றிய அறிக்கையின் ஒருபகுதி

தமிழுக்கு அதிகாரிகள் தமிழ்ப் பேராசிரியரேயன்றி, பேராய (Congress) அமைச்சர்களும் வடவரும் அல்லர். தமிழர் நூற்றுமேனி எண்பதின்மர் தற்குறியாதலால் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும் பிறரும் மொழிநாகரிகம் பண்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டுப் படிநிகராளியர் (Representatives) ஆகார். தமிழைக் காத்தல் தமிழாசிரியர் கடமை. தமிழுக்கு நேரும் கேட்டை உணரக் கூடிய பொதுமக்கள் மாணவரே. வருங்காலத் தமிழ்நாட்டையாளும் பொறுப்பு வாய்ந்த வரும் அவரே. ஆதலால் பேரா. இலக்கு வனாரைத்