உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

தண்டிப்பின பேரா. மு.வ. பேரா. அ. சிதம்பரனாதனார் உட்படத் தமிழாசிரியர் அனைவரும் பதவியை விட்டு விடுதல் வேண்டும்.

சீர்கேடு

ஞா. தேவநேயன்.

தென்மொழி 3:1:24.

"எழுத்து வடிவம் பற்றி அரசு வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தேன். அது சீர்கேடே யன்றிச் சீர்திருத்தமன்று. பெரியார் தமிழாக்கங்கருதி எழுத்து மாற்றஞ் செய்யவில்லை. அச்சுச் செலவைக் சுருக்குஞ் சிக்கனம் பற்றியே செய்தார். இந்தியையும் தமிழ்ப் பற்றால் எதிர்க்கவில்லை. பேராயத்தைத் தாக்க இந்தி யெதிர்ப்பு ஒரு நல்ல கருவியாய்க் கிடைத்ததென்றே வெளிப் படையாய்ச் சொன்னார். தமிழெழுத்து முதற் காலத்தில் விடுதலை எழுத்துப் போன்றேயிருந்தது. இருசுழியும் இரு வளைவுமுள்ள எழுத்து வடிவங்கள் மயக்கத்தை விளைத்ததால் அவற்றிற்குரிய கொம்பையும் இணைக் கொம்பையும் காலையும் நீக்கியும் மாற்றியும் எழுதினர்."

இலக்கியம் பண்டை எழுத்துவடிவில் இருக்கும் வரை தமிழுக்குக் கேடில்லை." என்பது பாவாணர் மடல்.

- அன்பு வாணன் வெற்றிச்செல்வி

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்

31-10-78

பெரியார்க்குத் தமிழ் எழுத்தை மாற்ற வேண்டும் என்பது கருத்தன்று. சிக்கனம் பற்றியே தம் சொந்த இதழில்அதைமாற்றிக் கொண்டார். 25 ஆண்டுகள் அவரோடு தொடர்பு கொண்டிருந்தேன். ஒரு முறை கூடப் பொதுமேடையிலோ என்னிடமோ எழுத்து மாற்றத்தைப்பற்றிச் சொன்னதில்லை. 1938 இல் அவர் ஈரோட்டில் இருந்து எனக்கெழுதிய ஏழு பக்கக் கடிதம் மரபெழுத்திலேயே இருந்தது.1947 - இல் எனக்கும் புலவர் பொன்னம்பலத்திற்கும் பெரியார் வழங்கிய வெள்ளிப் பட்டயத்திலும் மரபெழுத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது.

பாவாணர் 17-9-79-இல்