உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

பேரா. கு. பூங்காவனத்திற்கு வரைந்த கடிதப் பகுதி.

159

"தமிழெழுத்து மாற்றம் தேவையில்லை. மாற்றின் தனி நிலைமையே மாறிவிடும். அது பெரியாரின் அடிப்படைக் கொள்கையுமன்று" என்பது பாவாணர் கொள்கை (கடிதம் 9-11- 79; வி. பொ. பழனி வேலனார்). இகரத்தைச் சுழித்து ஈகாரமாக்குதல் ஒன்றே செய்ய வேண்டிய எழுத்துமாற்றம் என்பவரும் அவர். அதனைப் பாராட்டும் வ.சுப. மாணிக்கனார் "தமிழாழ்வார் எனப் போற்றப்பெற்ற மொழியறிஞர் தேவ நேயப்பாவாணர் வடமொழி யெழுத்துக் கலப்பு தமிழின் தூய்மையைக் கெடுக்கும் எனவும் தமிழெழுத்து வரிவடிவ மாற்றமும் தமிழுக்குத் தேவையில்லை எனவும் அழுத்தமாகக் கூறியவர்" என்கிறார். (எழுத்துச் சீர்திருத்தம் எங்கே போய் முடியும்?பக்.2)

குகரத்தைச்

சுழித்துக்

கூகாரமாக்குதலும், ஒள என்பதிலுள்ள 'ள' வைச்சிறிதாக்குதலும் ஏற்கத் தக்கவை என்பதும் பாவாணர் கருத்துகளாம். 'தமிழெழுத்துமாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா?' எனக் கட்டுரை ஒன்றும் வரைந்தார்பாவாணர் (செந்.செல். 54:325).

(C

ஆய்த வரியைச் சில அயலொலி குறிக்கப் பயன்படுத்தி ஃபி (F) ஃச் (sh, ஷ) என்றும் பிறவாறும் ஆண்டு வருதல் பகைவர் கையில் குடுமியைக் கொடுக்கும் பேதைமை போலாகும். எழுத்தென்பது ஒலியேயன்றி வரியன்று. ஒலியின் குறியே வரி. அயலெழுத்து வேண்டாமென்று நாமே சொல்லிக்கொண்டு நாமே அயலெழுத்தை ஆள்வோமாயின் அதை என்னென்பது?'

ஆய்த ஒலியைத் தவறான வழியிற் பயன்படுத்துவதனால் அதன் இயல்பான ஒலியும் கெடுகின்றது. கஃசு என்பதை Kahsu என்று ஒலிப்பதா? க (Kashu) என்று ஒலிப்பதா?

ஒலிஇலக்கணமும் தமிழியல்பும் அறியா மாற்றம் செய்தலால் பகைவர்க்குப் பிடிகொடுத்து அவர் எள்ளி நகையாட நேரும்.

அதிகாரப் பயன்

வ.சு; 31-1-52

நற்றமிழன் தக்க அதிகாரமுள்ள பதவியில் இருப்பதன் நலப்பாட்டைப் பாவாணர் தமிழ்க்குடி மகனார்க்கு வரைந்த