உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

கடிதமொன்றில் சீராகவும் செறிவாகவும் பொறித்துள்ளார் (11-8-79) கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்தமையால் அதற்குத் தக்க கடப்பாடுகளைச் சுட்டினார் பாவாணர்:

தமிழ் வளர்ச்சியும் தமிழன் உயர்வும் ஒன்றை யொன்று தழுவியவை.

அதிகாரமின்றி அங்குமிங்கும் ஓடியாடித் திரிநிலையினும் அதிகாரத்துடன் ஓரிடத்திருக்கும் நிலையே தொண்டு செய்யச் சிறந்தது.

அதிகாரமின்றி அங்குமிங்கும் ஓடியாடித் திரிநிலையினும் நிலையே தொண்டு

அதிகாரத்துடன் செய்யச்சிறந்தது.

ஓரிடத்திருக்கும்

1.கல்லூரிமாணவர் அனைவர்க்கும் தமிழ்ப் பற்றூட்ட லாம். தமிழ் என்பது செந்தமிழே.

2. ஆண்டுதோறும் வெளியேறும் மாணவருள் ஒருவரை யேனும் தமிழ்த் தொண்டராக்கலாம்.

3. அரசோ பல்கலைக் கழகமோதமிழுக்குக் கேடான சட்டம் பிறப்பிப்பின் அல்லது கட்டளையிடின் கண்டித்துத் தவிர்க்கலாம்.

4. இதற்குப் பிறகல்லூரி வையாபுரிகள் வலிமையைக் குறைக்கலாம்.

5. இந்தித் திணிப்பையும் வடமொழி வழிபாட்டையும் தடுக்லாம்.

6.உ.த.க. மாநாட்டுக்குத் தலைமை தாங்கலாம்.

7. கல்லூரிச் சார்பில் அல்லது தமிழ்ச் சார்பில்உலகஞ்சுற்ற வாய்ப்புண்டு. ஆங்கிலப் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் பெருக்கிக் கொள்க" என்பது அது.

தமிழாசிரியருள், தமிழ்ப்பற்றாளர் தமிழ்ப்பகைவர் கொள்கைகள் எனப்பாவாணர்வகுத்துக் காட்டும் பதின் கோட்பாடுகள் :

1. தமிழன் பிறந்தகம் குமரிநாடு, தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள்.

-