உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பல்சுவைப் பாகு

பல்சுவைப் பாகு என்னும் இப்பகுதி முப்பகுப்புடையது. பாவாணர் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள், சொல்லாட்சிகள், செய்திகள், குறிப்புகள் ஆகியவை இடம் பெற்றுள. ஓராற்றான் பொருணிலை கருதிக் கேட்டலும் கிளத்தலும், நெருங்கலும் நிகழ்தலும், அறிதலும் ஆய்தலும் எனப்பகுக்கப் பட்டிருப்பினும், மூன்றன் மயக்கமும் இடம்பெற வாய்ப்புண்டு. எனினும் பல்சுவைப்பாகு என்னும் பொதுப் பொருளுக்குத் தகும்.

1. கேட்டலும் கிளத்தலும்

அடிப்பா? எடுப்பா?

காரைக்குடி அழகப்பா கல்லூரிக்குப் பாவாணர் பொழிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர்தங்குவதற்கெனத் தனி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இலக்கிய மன்றச் செயலர், பாவாணரை அழைத்துக் கொண்டு தங்கு விடுதிக்குச் சென்றார். சென்றதும் பாவணர், விடுதியில் "எடுப்பா? அடிப்பா?" என வினவினார். செயலர்திகைப்படைந்தார். அவர்க்குப் பாவாணர் கூறுவதென்ன என்பது புரியவில்லை. அவர்திகைப்பதைக் கண்ட பாவாணர் கழிப்பு 'எடுத்துச் செல்லும் அமைப்பினதா? Flush-out அமைப்பினதா? எனக் கேட்டார். அவர், 'அடிப்பு' என்றார். பாவாணர்சொல்லாட்சிப் புதுமை வியப்பில் ஆழ்த்தியது. எவ்வளவு எளிய இயல்பான மொழியாக்கம் இது!

எச்சம்

காரைக்குடியில் நிகழ்த்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட

பாவாணர்,

"தக்கார் தகவிலர் என்பதவரவர் எச்சத்தால் காணப்படும் என்பதிலுள்ள எச்சம் என்னும் சொற்பொருளை விளக்கிப் பலப்பல எடுத்துக்காட்டுகளைக் காட்டினார். அதனைக் கேட்டுக்