உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

எண்ணி மிதிவண்டியோட்டி "ஐயா பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார்."போம்; பொறுத்தோம்" என்றார் பாவாணர்

பீச்சு

இதனை எழுதியவர் மின்னூர் சீனிவாசனார்.

கடற்கரைமின்

தொடர்வண்டிச்

சாலைப்பகுதியில்

பாவணர் சென்று கொண்டிருந்தார். தொடர்வண்டி நிலையத்தில் 'பீச்சு ஸ்டேசன்' என ஆங்கிலத்திலும் தமிழிலும் பலகையிருக்கக் கண்டார். இங்கே என்ன கறவைமாடா கட்டி வைத்திருக்கிறான் பீச்சுவதற்கு" என்று தம்மொடும் இருந்த திருக்குறள் முனுசாமி அவர்களிடம் கூறினாராம் பாவாணர்.

குடிதண்ணீர் குமட்டும்

(பாவாணர் பெருமை.99)

பாவாணர் மன்னார் குடியில் பணிசெய்து வந்த காலம். ஓரிடத்தில் குடிதண்ணீர் பொதுமக்கள் பயனுக்காக வைக்கப்பட்டிருந்தது. அதனை எவரும் வீண்படுத்தக் கூடாது என்பதற்காகக், “குடிதண்ணீர்க்கு மட்டும்” என்று எழுதியிருந்த எழுத்துகளில் ‘க’ என்பதை எவனோ ஒருவன் சுரண்டிவிட்டான்! சொற்பொருள் என்ன ஆகிவிடுகின்றது? "குடிதண்ணீர் குமட்டும்” எனப் பலரும் குடியாது சென்றனர் என்று நகைச் சுவையுடன் சுட்டுகிறார் பாவாணர். அவர்க்கு நகைச்சுவை இயல்பானது. சோறும் சாதமும்

சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாடு 1958; இடம் கோவை; தமிழ் மொழியில் கலைச்சொல்லாக்கம்' பற்றி உரையாற்றிய பாவாணர் உரைத்தது:

"சென்னையிலே ஒருமுறை நானும் சப்பையா பிள்ளையும் இருந்தபோது திருநெல்வேலியிலிருந்து 'நான் சைவ வேளாளன்' என்று தம்மைப் பெருமையாகச் சொல்லிக்கொள்பவர் ஒருவர் வந்தார். சாப்பிட்டு வந்ததும் 'என்ன ஐயா நன்றாகச் சாப்பிட்டீர்களா?' என்று கேட்டேன். 'சாதம் நன்றாக இருந்தது' என்றார். 'சோறு' என்று சொல்லுங்களேன் என்றேன். சோறு என்று சொல்லுதற்கு, நான் என்ன பள்ளு பறையா?' என்றார். அப்போது நான் பள்ளு பறையன்தான் சோறு உண்பதா?