உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

"ஊழுக்குக் கூத்தன்; கூழுக்கு ஔவை'

கட்டுரை இலக்கணம்: பக். 14

"வில்லுக்கு ஓரி, சொல்லுக்கு மாவலி,

கொடைக்குக் குமணன் நடைக்கு நக்கீரன்”

கட்டுரை இலக்கணம் : பக். 15

"மனைக்கு வேம்பு; மன்றுக்குப் புளி'

-

கட்டுரை இலக்கணம்: பக். 16

203

நடை

"புன்குடி லாயினும் தன்குடிலா யிருக்கவேண்டும்'

கட்டுரை இலக்கணம்: பக். 29

"மூத்த பிள்ளைக்கு உடல்வலி மிக்கிருக்கும் இளைய பிள்ளைக்கு மதிவலி மிக்கிருக்கும்"

கட்டுரை இலக்கணம்: பக். 277

பேச்சு நடைக்கு ஏற்ப எழுத்து நடை வேண்டும்; அதுவே மெய்யில் என்பார் உளர். "கீழ் மக்கள் பேச்சை ஒப்புக் கொள்ள வேண்டுமெனின், கீழ்மக்கள் ஒழுக்கத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அங்ஙனம் கொள்ளின் ஆட்சியும் காவலும் வழக்குத் தீர்ப்பும் குற்றத் தண்டனையும் வேண்டியதே இல்லை" என்கிறார் பாவாணர். (வ.சு. பவழவிழாமலர் பக்.4)

உரைநடையிலும் பாவுக்குரிய மெய்ப்பாடு செறிய வரைபவர் பாவாணர்: "இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப் பட்டதை அறிந்தவுடன் இளசைக்கிழார் சோமசுந்தர பாரதியார்க்குக் கண் சிவந்தது; மீசை துடித்தது; மயிர்சிலிர்த்தது; தம் உதட்டைக் கடித்து வஞ்சினங் கூறி உரறினார்" என்று விறலணிக்கு எடுத்துக் காட்டுக் கூறுகிறார் கட். வரை. 106)

மாப்பிள்ளை - பெண்

"சேலங் கல்லூரி மேனாள் முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டரின் இளைய மகன் (கடைக்குட்டி) வேங்கடேசன் 25 அகவையினன். பொறியியல் இளங்கலைஞன் (B.E.) சென்னையில் அரசியல் அலுவலன். 1500 உருபாச் சம்பளம் பெறுவோன். அழகுன், பொன்னிறத்தன், நற்குணன், திறமையன், மணப் பருவத்தின், ஆதலால் பெண்தேடுகின்றனர். இது வரை தக்க பெண் அமையவில்லை. பொன்னிறமும் பொற்பும் ஒண்கல்வியும்