உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

கூடாது' என்று சூள் (ஆணை) இடுவித்துக் கொண்டாள்.

பின்பு ஒருநாள் 'அடி! அடி! எங்கே போகிறாய்' என்று கேட்டான், அவள் ஓடிவந்து அவனை இருமுறை அடித்து 'நீ சொன்னபடியே செய்தேன்' என்றாள். மற்றொருநாள் அவன் அவள் தலையில் உமியைப் பார்த்து 'அடி! தலையில்உமி' என்றான். அவள் உடனே அவனை ஓரடியடித்து அவன் தலையில்உமிழ்ந்தாள். வேறொருநாள் கொஞ்சம் பணம் கொண்டு வந்து சொடுத்து இதை வீட்டுக்குள்ளே வை என்றான். அவள் அதை வீட்டுக்குள்ளே கொண்டுபோய், 'மூடனுடைய பணமே! முரடனுடைய பணமே!' என்று வைது கொண்டிருந்தாள். அவன் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, அறிவடைந்து அதற்குமேல் அவளை அடிப்பதை நிறுத்திவிட்டான்.

கட்டுரை இலக்கணம் : 257-8

உரைநடை அழகர் பாவாணர்: ஒரு சில சான்றுகள் : எளிமையில் அருமை

"திங்கட்கிழமை திருநாவுக்கரசு திரும்பி வந்தான்"

"கோனார் போனார்”; “எங்களூர் பெங்களூர்"

"அரவம் அரவம் அறியும்"

-மோனை

எதுகை

- மடக்கு

"அறிவார் அறிவார்? அறிவார்அறிவார்!"

- பின்வருநிலை

"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்"

-இரட்டுறல்

"மேலை விடையூழியர் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்த பெருநன்மையை மறுக்கவோ மறைக்கவோ மறக்கவோ முடியாது"

-ஒலிப்போலி

இங்ஙனமன்றிச் செயற்கையாய் அமைக்கும் மோனை

எதுகை முதலியவை சிறந்தன அல்ல.

சில நயமான தொடர்கள்