உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

201

(இருபதினாயிரம் கொட்டைப் பாக்கின் அளவைப்பெயர்

அம்மணம்)

கட்டுரை வரைவியல்110

"சிறு நூல்களிலும் பெருநூல்கள் நெடுந்தொகை யேயன்றிக் குறுந்தொகையன்று" (இரட்டுறல்) 17-1-33

உலாச்செல்ல இடமில்லை

தொழிலாளரும் தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் வதியும் இடங்களிலெல்லாம், தெருக்களிலும் சாலைகளிலும் இருமருங்கும் செய்யப்படும் துப்புரவுக்கேட்டைநினைப்பினும் சொல்லொணா அருவருப்புணர்ச்சியுண்டாம். நகரம் நரகமாகின்றது. மாநகரமோ

மாநரகமே.

சாலை நடுவிற் சென்றால் வண்டிகட் கச்சம்; ஓரத்திற் சென்றால் ஈறுமாறு நரகத்திற் கச்சம். இத்தகைய தீய நாற்றச் சூழலில் தூய காற்று எங்ஙனம் வீசும்? வீசுங் காற்றெல்லாம் வீச்சமன்றோ?

அமைதிக்குச் சிறந்ததாகச் சொல்லப்படும் நாட்டுப் புறச் சூழலும் இக்கால் இத்தகையதே. என்றோ ஒரு கால் வரும் பெருவெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டுபோய்க் கடலிற் சேர்ப்பினும் மீண்டும் பழைய நிலைமையே நேர்வதால் உலகிலுள்ள வரை அல்லது மக்கட்டொகை சரிபாதியாகக் குறையும் வரை உலாச் செல்ல இடமில்லை.

நகைச்சுவை

மண்ணில் விண்; 61

நகைச்சுவைச் செல்வர் பாவாணர்; ஒன்றைத் தாமே தம்மையடக்க முடியாமல் நகைக்கும் சொல்லிக் குழந்தை அவர். எழுத்தில் வரும் சில நகைச் கெய்திகள்:

ஒரு முரட்டுச் சேவகன் தன்ம மனைவியை நாள்தோறும் காரணமில்லாமல் அடித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் வழக்கப்படி அவளை அடிக்கையில் அவள் ‘நீ ஏன் இப்படி என்னை அடிக்கின்றாய்?' என்று கேட்டாள். அதற்கு அவன், 'நான் சொன்னபடி செய்யாமையால் அடிக்கின்றேன்' என்று சொன்னான். உடனே அவள் அவனுக்கு மதிகற்பிக்க எண்ணி 'இனிமேல் நீ சொன்ன படியே செய்கின்றேன். ஆனால், என்னை அடிக்கக்