உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

ஓர் எத்தன்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

நான் சென்ற ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த போது, அங்கோர்எத்தன், முன்னதாக வழியில் ஒரு பித்தளை நகையைப் போட்டு விட்டு வந்து, என்னோடு கூட நடந்துதான் புதிதாய் அந்நகையைக் கண்டெடுத்ததுபோல் எடுத்து, இதோபார்! ஒரு நல்ல பொன்நகை! இது ஐம்பது ரூபாய் பெறும்போல் இருக்கிறது. இது நம்மிருவருக்கும் பொது. கடைக்குப் போய் விற்று நாமிருவரும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், எனக்கு நேரமில்லை. உடனே புகைவண்டிக்குப் போக வேண்டியிருக் கின்றது. ஆகையால் நீயே எடுத்துக்கொள். ஒரு மதிப்பாய் விலையிட்டுப் பாதியைக் கொடுத்து விடு. நான் போகிறேன்' என்று சொன்னான். நான் 'எனக்கு இது வேண்டாம். நீதானே எடுத்துக் கொள்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டேன். இங்ஙனம் எத்துணையோ ஏமாற்றங்கள் நடந்து வருகின்றன.

-கட்டுரை இலக்கணம். 259

ச் செய்தி புனைவா? இல்லை, இலங்கைச் செலவு உண்மையா? இலங்கைச் செலவு பற்றிய செய்தி பிறவகை யான் அறியக் கூடவில்லை.

வஞ்சப்புகழ்ச்சி (Irony)

64

"இளங்கோவன் என்னும் மாணவனுக்கு இப்பள்ளிக் கூடத் தினிடத்து அளவிறந்த பற்றிருப்பதனால் இதிற் சேர்ந்து இருபதாண்டாகியும் இன்னும் இதனின்று வெளியேற விரும்பவில்லை.'

கட்டுரை வரைவியல் 106

உரைநடையில்அணிநடை காட்டும் பாவாணச் சான்றுள்

ஒன்று இது. மேலே வருவனவும் சில.

வளைகூற்றணி (நேராக் கூறாமல் சுற்றிக் கூறல்).

66

“அரைவண்டியில் கால்மாட்டைப் பூட்டிப் போகிறான்" நடந்து போகிறான்.

கட்டுரை வரைவியல். 110

இருபதினாயிரம் கொட்டைப் பாக்காய் (அம்மணமாய்)

இருந்தாள்.