உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதல்வரும்

பாவாணர்

நாற்புதல்வியருமாக

199

எண்மக்களைப்பெற்று

அறுபதாம் கலியாணத்தின் பின்பும் பல்லாண்டு மங்கலியராயிருந்து வாழ்வு முடித்தார். இவ்வாறு பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய யான்கண்ட புலவர்கள் என்னும் வரலாற்றுக் கட்டுரைப் புத்தகத்தில் உண்மையைச் சுட்டிக் காட்டிக் கணியம் பார்த்தலின் வேண்டாத்தனத்தை விளக்குகிறார் பாவாணர். மண்ணில் விண் 142.

மூடநம்பிக்கை

வீட்டு வாசலைக் குட்டையாக வைத்து முட்டிக் கொண்டு வாசல் தட்டிவிட்டதென்றும், வீட்டில் வளர்க்கப்படும் பூனை வெளியேவரின் பூனை குறுக்கிட்டதென்றும், வினைத்தடை யென்று மனந்தளர்வதும் மூவர்போன கருமம் மூதேவியடையும் என்பதும் மூட நம்பிக்கைகள் என்பதை விளக்குகிறார் பாவாணர். மண்ணில்விண் 143.

தீயோரைத் திருத்தும் வகை

தீயோரை நல்விழப்படுத்தும் உளவியற் கருத்துகளையும் குறிப்பிடுகிறார் பாவாணர்: 'கள்வருக்கு ஒற்றர்வேலையும் கொள்ளைக் காரருக்குப் படைத்துறை வேலையும் கொடுப்பின் ஓரளவு நிலைமைதிருந்தலாம்" என்றும் “கள்ளக் காசுத்தாள் அடிப்பாரையும் கள்ளத்தனமாகத் துமிக்கி (gun) சுழலி (revolver) முதலியன செய்வாரையும் பொறியாக்கத் தொழிலிற் பயிற்றின் சிறந்த பொறிவினைஞராகவோ புதுப்புனை வாளராகவோ தலையெடுக்கலாம்" என்றும் கூறுகிறார். (மண்ணில் விண்.144). பந்தயமும் பரிசும் பாவமே

"கிண்டிக்குதிரைப் பந்தயமும் அரசுப்பரிசுச் சீட்டும் சூதாட்டே, அரசு நடத்துவதனால் அவை நல்வினையாகா. வருவாயை நற்பணிக்குப் பயன்படுத்துவதனால் அவை அறவினையாகா. குதிரைப்பந்தயத்தில் ஒட்ட மொட்டிக்கெட்ட குடும்பங்கள் எத்தனையோ.

பரிசுச்சீட்டு வருமானத்தைக் கொண்டு அறப்பணி செய்யப்பட்டதெனின் கொள்ளையடித்த பொருளைக் கொண்டும் அது செய்யலாம்என்க." என்கிறார்.

மண்ணில்விண் 138, 149.