உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

என்.கே. வேலன், மா.சண்முக சுப்பிரமணியம் பி.எல். சாமி என்பார்,

தமிழ்க்கொடி

"திருச்சி புத்தூரில் இருந்த ஐயா தமிழ் உணர்வால் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டு அவர் இல்லத்தில் தமிழ்க்கொடி ஏற்றியதால் வேலை இழந்தார்” என்றும், “அப்பால் சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும் சேலம் கல்லூரியிலும் தமிழாசிரியர் ஆளார் என்றும், இந்தி எதிர்ப்புப் போர்இறுதியில் ஆங்கிலப் பேரரசுக்குத் தமிழ் நாட்டைத் தமிழ்நாடாக ஆக்கவேண்டும் என்று ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார்" என்றும் திருப்புத்தூர் தொ.வி.இரா.தொந்தியா பிள்ளை திருச்சி.8, கூறுகிறார்.

தென்மொழி; பாவாணர் நினைவிதழ் பக்.60.

பெயரிலும் பிரியாமை

மணமக்கள் பெயரைப் பிரித்து எழுதவும் விரும்பாதவர் பாவாணர். இருவர் பெயரையும் இணைத்தே திருமண வாழ்த்தில் பொறிப்பது அவர் வழக்கம். அவர் பாடியளித்த திருமண வாழ்த்துகள் அனைத்திலும்இக் கடைப்பிடியைக் காணலாம். மருவுதல், கலத்தல்; மணத்தல், கலத்தல் என்னும் சொல்லாய்வுத் தேர்ச்சியும் வாழ்வியல் தெளிவும் பாவாணர்க்கு இருந்தமையால் இதனைப் போற்றினார். உரைநடை எழுத்திலும் இக்குறிப்பை உணர்த்தினார்.

-

பகுத்தறிவு, புதுமை, சீர்திருத்தம் அமைந்தவர் பாவாணர். அவற்றுள் சில:

கணியம் பார்த்தல்

இன்னன இயல்பாக

சென்னைச் சிறுவழக்கு மன்றத் தீர்ப்பாளராக இருந்த பம்மல் சம்பந்த முதலியாரின் தந்தை பம்மல் விசயரங்க முதலியார்க்கு மணம்பேசியபோது சென்னையில் இருந்த முப்பெருங்கணியரும் அம் மணத்திற்குப் பொருத்தமில்லை என்றும், மணம் நிகழின் மணமகள் மகவு பெறாது விரைந்து அமங்கலையாவாள் என்றும் கூறிவிட்டனர். ஆயின் மண மகனார்க்கு மனப் பொருத்தம் மட்டிற்கு மிஞ்சியிருந்தது. அதனால் மணம் நிகழ்ந்தது. மணமகளார் நீடு வாழ்ந்து நாற்