உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

197

வாலறாத தவளைக்குட்டி அரைத்தவளைஎன்றும் தலைப் பிரட்டை என்றும் சொல்லப்படும்.

தெ.பொ.மீ. தமிழுக் கதிகாரியா? தென்மொழி 3

தொன்மையன்று முன்மை

18-12-70 ஆம் நாள் சென்னை இராசேசுவரி திருமண மண்டபத்தில் கழகப்பொன்விழா நடைபெற்றது. அதன் பிற்பகலில் நிகழ்ந்த மொழி மாநாட்டில்தமிழின் தொன்மை பற்றி உரையாற்றினார்: தலைப்பு என்ன ஆகின்றது பாவாணரிடம்?

தமிழின் தொன்மை என்பது எனக்குத் தரப்பட்ட பொருள். அதற்குத் தொன்மை எவ்வளவு காலமோ அவ்வளவு காலம் வேண்டும் அதைப்பற்றிப் பேச! தமிழின் தொன்மை என்று சொல்வதை விட முன்மை என்று சொல்வதே எனக்குச் சற்று உவப்பாகவும் தெரிகிறது!

"இந்த மாநாட்டு மலரிலே முன்மை என்ற சொல்லைத் தான் நான் ஆண்டிருக்கிறேன். ஏனென்றால் கிறித்துவுக்கு முற்பட்ட நிலைமைகள் எல்லாம்- செய்திகள் எல்லாம் பொதுவாகத் தொன்மையானது எனத்தான் சொல்லப் படுகின்றன. தமிழோ மிகத் தொன்மையானது. உலகத்திலுள்ள 3000 மொழிகளுக் குள்ளே முதன்மையானது. முந்தியதென்று சொல்லப்படக் கூடியது. ஆகையினாலே அதை முன்மை என்று சொல்வது மிகப் பொருந்தும்" என்கிறார்.

சாலமோன் காலத்தில் 'தோகை' பற்றிய குறிப்புண்மை கால்டுவெல் காட்டினார். அதற்கு முற்பட்ட ஆரிய வேதத்திலேயே தமிழ்ச்சொல் உண்டு. சிறப்புநிலைப் பொருளால்தான் ஒருசொல் எம்மொழிக் குரிய தென உறுதிசெய்யலாம். அவ்வகையில் தா, வெள்ளம், செப்பு என்பவை தமிழில் சிறப்புப் பொருள் தருதலால் தமிழ் என்று உறுதிப்படுத்தலாம். இது தமிழின் முன்மைச் சான்று என இக்கூட்டத்தில் விளக்கினார்.

கழகநூலாசிரியருள் ஒருவராகிய பாவாணர் இவ்விழாவில் பாராட்டுப் பெற்ற எழுவருள் முதன்மையர். பிறர் ஒளவை சு. துரைசாமி, பொ. வே. சோமசுந்தரனார், கீ. இராமலிங்கனார்,