உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

செயலாக்காமை 'கேடு' ஆதலை 'நாடு' இன்னும் அறிந்த

பாடில்லை.

எட்டாப் பெயர்களும் பட்டறிவும்

படங்கு, கரணன், முக்காட்டான், விசிறிவாலி, புக்கா, குமுறி, சுவரொட்டி,வானீலி, செம்புகரி, காடன், திரிவான், கொண்டையன், தென்கண்டத்தான் என்று புறாவகைகளாகப் பாவாணர் குறிப்பிடுவன, இன்னும்அகரமுதலியை எட்டாப் பெயர்களாகவே உள்ளன (கட். இலக். 1. 187).

"இக்காலத்தில் தமிழுக்கே உழைப்பவர்க்கும் தமிழை வளர்ப்பவர்க்கும் தூற்றலும் வேலைக்கேடும் தவிர வேறொன்று மில்லை. ஆனால், தமிழைக் கெடுப்பவர்க்கோ போற்றலும் பட்டமும் பதவிகளும்பரிசளிப்பும் பணமுடிப்பும் நிரம்பவுண்டு" என்பது (கட். இலக். 1. 288) தம்பட்டறிவின் பிழிவுச் செய்தி எனலாம், முன்னரும் இது சுட்டப்பட்டது.

தமிழர்க்குப் பெயரிட அருமையாம் பொருளுண்டா?

தண்டோடு ஒட்டியிருப்பதைத் தாள் என்றும்; அது நீண்டு தொங்கின் தோகை என்றும்; திண்ணமாயிருப்பின் ஓலையென்றும்; மெல்லிதாயிருப்பின் இலையென்னும்; மாம்பிஞ்சை வடுவென்றும்; பலாப்பிஞ்சை மூசு என்றும், வாழைப் பிஞ்சைக் கச்சல் என்றும் வேறுபடுத்துச் சொன்ன நுண்மாண் நுழைபுலத் தமிழர்க்குப் பெயரிட அரிதாம் பொருள் இவ்வுலகத்தில் ஏதேனும் உண்டோ? இவ்வாற்றல் இன்னும் அழியாதிருப்பதை நாஞ்சில் நாட்டு வைத்தூற்றி (Funnel) என்னும் சொல்லிற் காண்க.

தமிழர்க்குப் பெயரிட அருமைப் பொருள் இல்லை! பாவாணர்க்குப் பெயிரிட அரியதெதுவும் அறவே இல்லை என்பது நாடறி செய்தி, தவளை வகைவிளக்கம் ஒரு சான்று: தவளை இனத்திற் பலவகை

வெளிறித் தேய்ந்து போய் இருப்பது தேரை; சொறியுள்ளதாய் இருப்பது சொறியன்; பருத்துப் பச்சையாய் இருப்பது மொங்கான்; மணலுக்குள் இருப்பது நுணல்;