உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

195

எருதந்துறை

எருதந்துறையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் விழைவு பள்ளியிறுதித் தேர்வு முடித்த காலந்தொட்டே பாவாணர்க்கு எழுந்திருக்கிறது. அவ்விழைவு தம் அளவில் நிறைவேறவில்லை என்பதனால் அதனை விடுத்தார் அல்லர். தம் பேரன்புக்கு உரியவரும் உற்றுழி உதவாளருமாகிய திரு. முத்துக் கிருட்டிணர்க்குத் தம் விழைவைக் கூறி அவர் மக்களை அவ்வழிக்குப் பயிற்றுவிக்க வேண்டுமென்று (செல்வன் நக்கீரனை) ஊக்குக. நக்கீரனுக்குச் சொன்னதே இறைவிக்குமாம்." என்கிறார். இறைவி நக்கீரன் தங்கை! யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்பதனினும் மேலே ஒருபடி சென்று யான் பெறாப் பேறும் இவ்வையகம் பெறுக என்பதான செய்தி இது. மேலும் குழந்தைகள் எருதந்துறை செல்லநேரின் பெற்றோர்களும் உடன் செல்லவும் உடன் உறையவும் அணியமாதல் வேண்டுமெனக் கருதும் பாவாணர் அந்நாட்டு நற்குடி மக்கள் ஒரு மேசையில் ஊண் வகைகளை வைத்துச் சூழ இருந்து உண்ணுகின்றதும் உரையாடுவதுமாம் பயிற்சிகளையும் இங்கேயே - தம் இல்லத் திலேயே - வழக்கத்திற்குக் கொண்டுவந்துவிட வேண்டு மென்றும், அக்கடைப் பிடியையும் உள்வைத்து அயலறியா வண்ணம் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். தம்மை அக்குடும்பத்துள் ஒருவராகக் கொண்டு ஒன்றாகி உடனாகிச் சொல்லும் அருமை பாவாணர் தனிச் சிறப்பென உருக வைக்கினற்து. (எ.சுறவம்,

2000)

தமிழே ஆட்சிமொழி

"கும்மியடி பெண்ணே கும்மியடி - நல்ல

கொன்றை மலர்சூடிக் கும்மியடி

நம்மையாளும் தனி நாயகம் நம்மிடம்

நண்ணிய தென்றுநீ கும்மியடி

ஆட்சி மொழியிங்கே ஆங்கிலமாய் - என்றும்

ஆகிவிடின் அதுகேடாகும்

மாட்சி மிகுந்ததமிழ் மாநிலத் தாளுகை

மாதரசே வரக் கும்மியடி'

கும்மியாட்டத்துப் பாட்டிலே ஆட்சிமொழி தமிழாக வேண்டு மென்பதைத் தேர்ந்து சொல்கிறார் பாவாணர். அதனைச்