உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

பாவாணர்,

இளங்குமரனார் தமிழ் வளம் - 23 மிகமகிழ்கிறார்.

பேரா. இலக்குவனார்

பதவியமர்த்தம் பெற்றதாம் மகிழ்வுக்குப் பின்னர் நேர்ந்த மகிழ்வுச் செய்தி ஆதலான் மற்றுமொரு மகிழ்ச்சிச் செய்தியாகக் கொள்கிறார்.தாம் பணி முடிக்குமுன் விடுவிக்கப்பட்டதும், சொற்பிறப்பியல் அகர முதலி செய்யவிடா வண்ணம் இடர்ப்படுத்தியதுமாம் தீமைகளுக்குக் கழுவாய் போல இவ்வமர்த்தம் வாய்ந்ததாகப் பாராட்டுகிறார். தகுதி வாய்ந்த மாணிக்கரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக அமர்த்துதற்கு இது முதற்படியாக அமைவதாக என வாழ்த்து கிறார். பாவாணர் பேருள்ளம் இவற்றில் பளிச்சிடல் உண்மை. மூவர்

தமிழினத்தை முன்னேற்ற மூவர் தோன்றினர். திருவள்ளுவர் தலை; உயர்நிலை மக்கட் குரிய தொண்டாற் றியவர்; மறைமலை யடிகள் இடை; இடை டை நிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர்; பெரியார் கடை; கடைநிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர். தமிழைப் பொறுத்த மட்டில், மறைமலையடிகள் தொண்டு மூவகுப்பார்க்கும் பொதுவாகும்.

பாவாணர் 'வரிசை யறிதலில்' தேர்ந்தவர் என்பதைச் சுட்டும் ஒன்று இது.

இருமொழித் தேர்ச்சி

பாவாணர் மொழிக் கொள்கை இருமொழிக் கொள்கையே. ஆய்வாளர்க்குப் பன்மொழிக் கொள்கைதகும் எனப் பரிந்துரைப்பவர் அவர். பன்மொழிப் புலவராகிய அவர் ஆங்கிலத்தை உலக மொழியாகவும் அறிவியல் மொழியாகவும் கண்டமையால் அம்மொழித் தேர்ச்சி, நம்மொழி வளர்ச்சிக்குப் பேருதவியாம் எனப்பட்டறிவால் அறிந்தவர். ஒருகால் ஈரகவையாக இருந்த முத்தமிழ்ச் செல்வியை (அறவாழி தமிழரசியர் மகள்)க் குறித்து 'முத்தமிழ்ச் செல்வியை ஒருபோதும் மறவேன். இளமையில் இருந்தே தமிழ் ஆங்கிலம் இரண்டும் பயிற்றுவிக்க" என எழுதுகின்றார் (1-5-71). ஆங்கில மொழிவல்லாரால் தமிழும் தமிழரும் பெற்ற நலங்களைப் பல்கால் பன்னூல்களில் பாராட்டும் பாவாணர் உள்ளம் இவ்வூக்குறுத்தலால் நன்கு விளங்கும்.