உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

193

ஏக்கமுறும் பாவாணர் தமிழர் வரலாற்றில் தனித்தமிழ் முன்னோடியாக அவரைக் காண்கிறார் (332-333)

"தனித்தமிழ் முன்னோடியார் இருவர்."

நாட்டுப் பற்றிற்கு உயிர், மொழிப்பற்று, முன்னது எல்லார் வாயிலாகவும் வெளிப்படும்; பின்னது புலவர் வாயிலாக மட்டுமே வெளிப்படும்.

இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் சூரிய நாராயண சாத்திரியார் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞன் என்று மாற்றி, மறுமலர்ச்சித் தனித்தமிழ்த் தொண்டைத் தொடங்கி வைத்தார்.

பாம்பன் குமர குருதாச அடிகள், சேந்தன் செந்தமிழ் என்னும் ஐம்பான் வெண்பாத் தனித்தமிழ் நூலியற்றி நூற்றுக் கணக்கான வடசொற்கட்கு நேர்த்தென் சொற்களும் மொழி பெயர்த்தும் ஆக்கியும் வைத்துள்ளார்" எனப் பாராட்டுகிறார்.

ஓராய்வாளருக்கு அல்லது உண்மையைத் தேடுநர்க்குக் கருவிகள் கிட்டக் கிட்டப் பயன்படுத்திக் கொண்டு மேலே செல்லுதல் கண்கூடாதல் இதனால் விளங்கும்.

மகிழ்ச்சிச் செய்தி

ஒருவாறு நாடுகடத்தப்பட்ட பண்டாரகர் சி.இலக்குவனார் மீண்டும் தமிழ்நாட்டில் முன்பு பணியாற்றிய நாகர்கோவில் இந்துக் கல்லூரி முதல்வராக அமர்த்தப் பட்டிருப் பதறிந்து மகிழ்கின்றோம். அது அவர் முன்பு அவாவிய பதவியேயாயினும் தமிழுக்கும் தமிழர்க்கும் அவர் அறிவாற்றலும் தொண்டும் பெரும் பயன்படுமாறு மதுரைப் பல்கலைக்கழகத் துணைக் கண்காணகராக அமர்த்தப்பெறின் பெரிதும் மகிழ்வுறு வோம். அவர் நீடு வாழ்க. அவர்பணி பன்மாண் சிறந்தோங்குக.

பெருஞ்சித்திரன்

பொதுச்செயலாளர், உ.தக.

ஞா. தேவநேயன்

தலைவர் உ.த.க.

பொறாமைத் தமிழுலகில், புகழ்ஞாயிறு கிளர்ந்தது

புத்தொளி பரப்புதலன்றோ இது!

மற்றுமொரு மகிழ்ச்சிச் செய்தி

பர். வ.சுப.மாணிக்கனார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தமிழ்த் துறைத் தலைவராக அமர்த்தப் படுதலை அறிந்த