உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பட்டம் வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பாராட்டியது. இதனை அறிந்த பாவாணர் பொற்பதக்கம் பற்றியோ, பொற்கொடை பற்றியோ ஒரு குறிப்புமில்லை' என்று சுட்டிக் காட்டி வரிசையறிதல் என ஒரு கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வரைந்தார் (54: 453)

அதில், இருவர்தம் இணையற்ற தமிழ்த்தொண்டுகளையும் விரித்தெழுதி, நிறைவில் இவ்விருவர்க்கும் தனித்தனிக் குறைந்த பக்கம் பத்தாயிரம் உருபாயேனும் பொற்பதக்கத்துடன் வழங்குதல் வேண்டும். இவ்விருவரும் கழிபெரு மூப்பெய்தி யுள்ளதோடு, புலவர்மயிலை சீனி வேங்கடசாமியார் நோய்வாய்ப்பட்டும் பாயும் படுக்கையுமாயுள்ளார். ஆதலால் அரசோ ஒரு பல்கலைக் கழகமோ இரண்டும் இணைந்தோ இச் சிறப்பை இயன்ற விரைவில் செய்து தம் கடனைத் தீர்ப்பனவாக: நோயுண்டவர்க்கு மருத்துவம் செய்வதும் அரசின் கடமையே. ஒரு புலவரைக் குன்றச் சிறப்பித்தல் போற்றாமையின் பாற்பட்டதே. Domn with faint praice a comment go frigidl as to suggest disapproval. இவ்வாறு வரைந்த பாவாணர், குறிப்பு என்னும் தலைப்பிட்டு எழுதுகின்றார்: "இக்கட்டுரை எழுதியபின் மிக வருந்தத்தக்க அமங்கலம் நேர்ந்துள்ளது. ஆதலால் ஆராய்ச்சிப் பெரும்புலவர் மயிலை சீனிவேங்கட சாமிக்குக் கொடுக்க வேண்டியதை அவர் குடும்பத்தார்க்குக் கொடுக்க என்பது அது.

தக்காரைப் புரத்தல் தமிழறிந்தார் கடனெனப் பாவாணர் அறிவுறுத்துதல் இவ்வரிசையறிதலால்புலப்படும். பிற தமிழறிஞர் பெறும் பேறு தாம் பெறும் பேறு எனப் பாவாணர் கொண்டதை யும் இதுவிளக்கும்."

முதல் தனித்தமிழ்க் காப்புநூல்

"பாம்பன் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எழுதிய சேந்தன் செந்தமிழ் பார்க்கவில்லை. 1906 இல் நான் நாலாட்டைச் சிறுவனாயிருந்தபோதும், அடிகட்குப் பத்தாண்டு முன்பும் அவர்கள் தனித்தமிழ்க் காப்புநூல் முதன் முதலாக எழுதினார்கள் என்பது மிகமிக மெச்சத் தக்கதே. உடனே ஒருபடி வாங்கியனுப்புக. தமிழர் வரலாற்றில் அவர்களைப் பாராட்ட வேண்டும். தமிழ் வரலாறு அச்சிட்டபோது தாங்கள் இச்செய்தியைத் தெரிவிக்கவில்லையே" (17-8-71 வ.சு.) என