உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

191

இட்டிலி போன்றே தோசையும் தமிழகத்தில் தொன்று தொட்டு வழங்கிவரும் தமிழர் சிற்றுண்டி வகையாகும். தோசை என்னுஞ் சொல், தோய் என்னும் பகுதியடியாகப் பிறந்ததாகும். தோய்தல்-உறைதல், திரைதல், பிளித்தல். தோயும் வெண்டயிர் (கம்ப. நாட். 28) இட்டிலி மாவினும் தோசை மா மிகப் புளித்திருத்தல் வேண்டும். இல்லாக்கால் சட்டியில் எழும்பாது. எளிதாய் வேகாது, சுவையாயுமிராது தோய் - தோயை - தோசை. ய-ச. போலி. இன்றும் நாட்டுப்புறத்தார் தோயை என்றே வழங்குவர்.தோசை தூய தமிழ்ச்சொல். மலையாளத்தில் 'தோச' என்றும், கன்னட தெலுங்கு மொழிகளில் 'தோசெ' என்றும் வழங்குகின்றது.- தேடிப்போயும் தெளிவு செய்யும் பாவாணர் இயல்புச் சான்றுகளுள் 'தோசை' ஒன்று.

காலம் முதலியன

திருச்சியில் நிகழ்ந்த வடமொழிச் சங்கத்தின் ஆண்டு விழாவில் அவைத்தலைவர் காலம் என்பது வடசொல் என்றார். பாவாணர் அது தென்சொல்லே என்பதை விரிவாக விளக்கித் தம்பள்ளிக் கூடச் செய்திச் சுவடியில் வெளியிட்டார். அது, காலம் என்னும் சொல் எம்மொழிக்குரியது? என்னும் வினாவுடன் செல்வியில் வெளிவந்தது. (17:394). அதற்கு முன்னரே, பண்டைத் தமிழர் காலக்கணக்கு முறை எனக் கட்டுரை வரைந்தவர் பாவாணர் (17:261)

'குரல் மத்திமம்' என்றொரு கருத்து எழுந்தது. குரலே சட்சம் என்று எழுதினார் பாவாணர் (20:330) மீண்டும் குரல் மத்திமம் என்று கட்டுரை வெளிப்பட்டது. குரல் சட்சமே மத்திமமன்று என நிலைப்படுத்தினார் பாவாணர் (20; 465). திரு என்னும் சொல் வடசொல் என்றனர். திருவென்னும் சொல் தென் சொல்லே என்று நாட்டினார் பாவாணர் (20: 243). மாணவன் தென்சொல்லா? வடசொல்லா? காரம் காரன் காரி குடிகை குடிசை விளக்கம் இவ்வாறெல்லாம் எழுந்த கட்டுரைகளின் வளர்ச்சியே தெ. பொ. மீயின் திரிபாராய்ச்சி என விரிந்ததாகும் (செந். செல். சிலம்பு. 54). வரிசையறிதல்

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் 29-3-80 இல் ஒளவை சு. துரைசாமி அவர்களுக்கும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கும் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் சிறப்புப்