உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

205

வரலாறுகளையும் நிகழ்ச்சிகளையும் பற்றி வரையும் போது சிறுபுன் செய்திகளைக் கூறுதல் கூடாது.

ஷை

ஈகைப் பயன்

மன்னார் குடியில் இருந்த ஒரு பண்ணையார் (மிராசுதார்) தம் பெருங்குடும்பத்துடன் இராமேசுவரம் போய்ப் பல வண்டிகளில் திரும்பும் போது, வழிப்பறித்த கொள்ளைக் கூட்டத் தலைவன் அப்பண்ணையாரின் மனைவியார் ஈகையாட்டியராய் இருந்ததினால் அவர் வண்டியை மட்டும் தானே காவல் செய்து கவராது விட்டு விட்டான். (பண்டைத் தமிழ நாகரிகமும் LIGOOT LIITBID. LIŠ. 224-225).

ஐயாத்துரையார்

'காலஞ்சென்ற செண்டாத்தூர் ஐயாத்துரை முதலியார் மக்களால் மறக்கப்பட்ட வள்ளல்களுள் ஒருவர்' எனக்கட்டுரை இலக்கணத்தில் சுட்டுகிறார் (1:34) பாவாணர். அவரை அறிந்தார் வெளிக்குக் கொணர்தல் வரலாற்றுப் பணி.

பிறநாடுகளில் எல்லாம் அரசியற் கட்சி பலவிருப்பினும் நாட்டு மொழி அவையெல்லாவற்றிற்கும் பொதுவாகும். இப்பாழாய்ப் போன தமிழ் நாட்டிலோ ஒவ்வொரு கட்சியொடும் ஒவ்வொரு மொழி தொடர்புறுத்தப்படுகிறது. அதிலுங்கேடாக நாட்டுமொழியே நாட்டவரால் வெறுக்கவும் படுகின்றது. மொழியல்லவா மக்கள் முன்னேறும் வழி? தாய் மொழியைப் பேணாத நாடு தமிழ்நாடு தவிர வேறு ஏதேனும் உண்டா?” என்று வினாவும்நிலை (கட். இலக். ஐ.65) அன்றையினும் இன்றை மிக வினாவுமாறே உள்ளது.

பாவாணர் பாவன்மை

நேரிசை வெண்பா, குறள் வெண்பா, கலிவிருத்தம், கலித்தாழிசை, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, எண்சீர் ஆசிரிய விருத்ம், அறுசீர் ஆசிரிய விருத்தம், எழுசீர்ச் விருத்ம்,அறுசீர் சந்தவிருத்தம், இசைப்பா, கும்மிப்பா, நூற்பா ஆகிய பலவகை பாக்களும் பாவினங்களும் பாடியவர் பாவாணர். சீர்த்தனை