உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

எனப்படும் கீர்த்தனை முதலாம் இசைப்பாடல்கள் பாடுதலிலும் இசைத்தலிலும் தேர்ந்தவர்.

அவர் பாடல்களுள் சில

"மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவிக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார்”

ஆனை நடையும் அரிமாப் பெருமிதமும் கோனையும் சாடிக் குமுறுரையும் - தானையே தாக்கினும் அஞ்சாத் தறுகண்ணும் மேலாடைச் சேக்கையும் பாரதிதாசன்.

பெரியார்

புண்ணூற்றுக் கல்லடியும் சாணக் குண்டும்

பொறுத்தலருஞ் சொல்லடியும் புகழ்போற் கொண்டு மண்ணாற்றிற் கலஞ்செலுத்தும கடுஞ்செய் கையோல் கைதூக்கித் தென்னவரைக் கரையி லேற்றித் தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்த பின்னும்

துளங்காது துலங்குபகுத் தறிவுத் தொண்டால்

நண்ணூற்றைத் தாண்டவரும் நோற்ற லாற்றின் நானிலத்துப் பெரியாரை வாழ்த்து வோமே

மறைமலையடிகளார் நாட்குறிப்புகளில் பாவாணர்

முதன்மொழி 1:3:1

7-5-1945 சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்ப்பண்டிதர்திரு. தேவநேயப் பாவாணர் சில தமிழ்ச்சொற்களின் பிறப்புக் குறித்து ஆழமான உரையாற்றினார். அவர்தம் உரையில் பொதிந்திருந்த ஆழ்ந்த அறிவும் நகைச்சுவையும் கேட்போரைப் பணித்தன.

பக்.91

19-4-1946 பண்டிதர் தேவநேயப் பாவாணர் வந்தார். தம் தமிழ்ப் புலமைக்குச் சான்றிதழ் வழங்குமாறு வேண்டினார். கொடுக்க இணங்கினேன். தம்முடைய நூல்களான திரவிடத்