உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

207

தாய், கட்டுரைவரைவியல், சுட்டு விளக்கம் ஆகியன எனக்குக் கொடுத்தார்.

பக், 92-3.

1-7-1949 டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், பண்டிதர் இராசமாணிக்கம்பிள்ளை, திரு. தேவநேயன் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்க்குப் பதில் விடுத்தேன்.

(இக்குறிப்புகள் 26-6-89 இல் கிடைத்தன)

பக். 95

பாவாணரை நெருங்கியிருந்தவரும் அவர் உறவினரும் என் தலைமையாசிரியருமாகிய திரு. பால் வாசன் அவர்கள் 27-6-89 இல்சில குறிப்புகள் விடுத்துளர். என் இனிய தமிழன்பர் புலவர் திரு.மாடசாமி அவர்கள் வழியே கிடைத்த குறிப்புகள் இவை.

1)

2)

3)

திரு.வி. வேதநாயகம் (தாளாளர்) நடத்திய சோழபுரம்மி- ன் (S.M.) பள்ளியில் விடுதியிருந்ததால் 1910 ஆம் ஆண்டில் அங்குத் தங்கி ஐந்ாண்டுகள் திரு. S. முத்துசாமி ஆசிரியரிடம் தொடக்கப்பள்ளிப் படிப்புப் படித்தார்.

வேலூர் (வடஆர்க்காடு) மிஷன்பள்ளி ஆசிரியர் குருபாதம் அவர்கள் வீட்டில் தங்கியும் அங்கிருந்த விடுதியில் தங்கியும் எட்டுவரை படித்தார். (இவ்விடம் ஆம்பூர் ஆகலாம்)

ஆசிரியர் பயிற்சி பெற்றுக்கொண்டு 1921 சூலை மாதம் சோழபுரம் மிஷன் பள்ளியில் (சீயோன் மலையில்) திரு. இராசேந்திரன் என்னும் தலைமை யாசிரியரின் கீழ் மூன்றாம் ஆசிரியராக 1921 சூலை தொடங்கி 1922 பெப்பரவரித் திங்கள் இடைவரை வேலை பார்த்தார்.

4) 1922 சனவரிக்கு உருபா. 16-உம், பெப்ரவரித் திங்களுக்கு உருபா.8-உம் சம்பளப்பட்டியில்கையொப்ப மிட்டுப் பெற்றுள்ளார்.

(இக்குறிப்புகளால் பாவாணர் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற பின்னரே முறம்பில் ஆசிரயரானார் என்பது தெரிகின்றது.