உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பெரும்பிரிவும் பேரிரங்கலும்

பெரும்பிரிவு

"நான் மாநாட்டு வரவேற்புக்குழு உறுப்பினனாதலால் 4-10. மதுரையில் தங்கி, 11-1-81 சென்னை திரும்புவேன். குழுத் தலைவர் முதலமைச்சரே.

5-1-81 பிற்பகல் 2 மணிக்கு மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்னும் தலைப்பில் மாநாட்டில் சொற்பொழிவாற்றுமாறு மாநாட்டுப் பொதுக்கூட்டத் தலைவரும் வேளாண்மைத்துறை அமைச்சருமான திரு. காளிமுத்து விருப்பப்படி இசைந்துள்ளேன். நண்பருடன் வருக" எனப் பேராசிரியர் பூங்காவனர்க்கு 31-12-80 இல் மடல் விடுக்கிறார்பாவாணர். 2-1-81 இல் எனக்குத் தாம் 3-1-81 இல் மதுரை எய்தி அரிமா உண்டிச்சாலையில் தங்க இருப்பதைக் கைவழியஞ்சலாய் விடுக்கிறார். அதன்படியே மதுரைக்கு 3-1-81 இல் வந்து அரிமா விடுதியில் தங்குகிறார். உரையாடலிடையே அரிமா விடுதியில் "அரிமா உணவும் வரிமா உணவும்" வழங்குவதைச் சுட்டுகிறார். 4-1-81 இல் சளித்தொல்லையுடன் எம் இல்லத்திற்கு வந்தார். மருத்துவரைப் பார்க்கலாம்; மருந்துண்டு சீர்செய்து விடவேண்டும் என்றேன். "பழக்கூட்டு உண்டேன்; அதனால் தொண்டை கட்டி விட்டது; சீராகிவிடும்" என்று நிலைவிளக்கம் செய்தார். நலங்குன்றிய நிலையிலும் உறுதியில் தலைநின்றார்.

மறுநாள் (5-1-81) பந்தயத்திடலில் நிகழ்ந்த பொது நிலைக் கருத்தரங்கில் மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்னும் தலைப்பில் பொழியத் தொடங்கினார். அலைமோதும் மக்கள் தலைகளெல்லாம் பழங்குமரிப் பரப்பும் குமரிக்கடலுமாகத் தோன்றியவோ என்னவோ? பாவாணர் கடல்மடை திறந்த வெள்ளமென - பொங்குமாகடல் வீழ்ச்சியென - ஊ ஊழியிறுதி யிலாம் ஆழிப் பேரலையென்னப் பொழிந்தார்! தம்மை மறந்தார்! தம் பொழிவே உருவானார்! கூட்டம் எத்தகையது! எத்தகு