உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

209

செவியர் கூடியிருப்பவர்! மேடையில் இருப்பவர் எந்நிலையர்! இவற்றை எண்ணினார் அல்லர்! தாம் வேறு தம்பொழிவு வேறு எனப்பகுத்துணர வல்லார்க்குத் தாமே அவையெண்ணவரும்! தாமே கருத்தாகவும், தாமே கருதுகோளாகவும் ஆகிவிட்ட இருமையில் ஒருமையர் இடைத்தடையைக் கருதுவாரா, கையொலியைக் கணக்கிடு வாரா? 'நிறுத்துக' என்றும் கூட மேடையில் இருந்த ஒருவர் இடையே வந்து, காதோடு காதராகிக் கடித்துப் போனாராம்! அவர்க்கு, நிறுத்துகிறேன்; நிறுத்தத்தான் போகிறேன் என்று சொல்லிய சொல்லை நிலைப்படுத்தி விட்டார் பாவாணர்.

மணிநேரப்பொழிவு;

தமிழுக்கு

ஒன்றே கால் தமிழினத்திற்கு-த் திருப்பு முனையாம் காலம்வந்து விட்டது என நம்பிப் பொழிந்த பொழிவு! அதன் விளைவு இயல்பாக உடல் நலங்குன்றியிருந்த அவர்க்கு இவ்வுணர்வுப்பீறீடு - நெஞ்சாங் குலையைத்தாக்கி விட்டது!

உடனே

விடுதிக்கு வந்தார் பாவாணர் நெஞ்சில் வலி கண்டது! குருதியழுத்தம் மிகுந்தது; பேச்சுத் திணறியது! மருத்துவர்கள் வந்து பார்வையிட்டனர். மருத்துவமனையில் சேர்க்க ஏவினர். மதுரை அரசினர் இராசாசி மருத்துவமனையில் இரவு 10.45-க்குச் சேர்க்கப்பட்டார்.

செய்தியறிந்த முதல்வர் மருத்துவமனைக்கு எய்தினார். மருத்துவமனை அவ்விரவுப் போழ்தும் கூட சுருசுருப்பாயிற்று! எத்தகைய சுருசுருப்பு உடனே எய்துகிறது! தனிப்பெருங் கண் காணிப்புகள் எப்படியெல்லாம் தேடியும் ஓடியும் குவிகின்றன. ஓரளவு வலி நின்றது! மீண்டும் தாக்குமோ என்னும் அச்சம் இருந்திருக்கிறது மருத்துவர்களுக்கு! மயக்க நிலையிலே பாவாணர் வைக்கப்பட்டார்!

மயக்கநிலை நீங்கியபோது அவர்க்கு உண்டாகிய அரற்றொலி அதிர்ந்தது! அந்த உரவோரையும் அப்படி வாட்டும் வலியா? வலியை வென்றுவென்று வலிமையுருவாகி யவர்க்கும் வலியின் வாட்டுதலா? கேட்கப் பொறுக்கவில்லை! நிற்கப் பொருந்த வில்லை! பேச்சிலா நிலைக்குச் சென்று விட்டார் பாவாணர்! மூச்சிலா நிலைக்குப்போகாவண்ணம் மருத்துவர்கள் கண்காணிப்பு நிகழ்ந்தது!