உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பாவாணர்க்கு நேரிட்ட நேர்வு தெரிந்து அவர் மக்கள் எய்தினர்; மறுகிப்போயினர்; எப்படி வழியனுப்பி வைத்தவர்கள் அவர்கள்! ஒரு சொல்தானும் சொல்லமுடியாமல் - விழிதிறந்து ஒரு பார்வையும் பார்க்க முடியாமல் இருக்கும் தம்முயிர்த் தந்தையரைக் கண்டு எவர்க்கே தாங்க இயலும்! எவர் வந்தென்ன? எவருருகி என்ன?

14-1-81 இல் மீண்டும் ஒரு தாக்கம் ஏற்பட்டது. எது வரக்கூடாதென எண்ணப்பட்டதோ, அது வந்து விட்டது! செய்தியறிந்த முதல்வர் - சென்னையில்இருந்து வானூர்திவழியே தேர்ச்சி மிக்க மருத்துவர் இருவரை அனுப்பினார். மருத்துவர்கள் பெரிதும் முயன்றனர்! "ஊழிற்பெருவலியாவுள மற்றொன்று சூழினும் தாம்முந் துறும் என்னும் பொய்யாமொழி பொய்யாமொழியாயிற்று.15-1-81 இரவு 12.30 க்குப் பாவாணரின் ஒடுங்கா மூச்சு ஒடுங்கிவிட்டது! மாலைக் கதிர்களை ஒடுக்கிச் சுருட்டி மறையும் ஞாயிறென மொழிஞாயிற்றின் பேச்சுடன் மூச்சும் ஒடுங்கி விட்டன! வாராது வந்த மாமணியைத் தமிழுலகு இழந்தது!

அரசுச் சார்பிலே பாவாணர் உடல் 16-1-81 இல்

சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது. செய்தியறிந்த தமிழுள்ளங்கள் துடிதுடித்தன. தமிழ்த் தலை மகனைக் கடைசி முறையாகக் காண நேர்ந்ததைத் தவறவிடக் கூடாதெனத் தத்தளித்துச் சென்னைக்குத் திரண்டன.

பாவாணர் தமிழுலாச்சென்றதைக் கண்ணாரக் கண்டவர்கள் அவர் உடலம் திரும்பிவரும் செய்தியறிந்து அவர் குடியிருந்த இல்லத்திலே குழுமியிருந்தனர். பெரும்பிறிதாதல் என்பதை விளக்கிய பெருமான், பெரும்பிறிதாகிய துயர் அறிவறிந்தோர் மயிர்க்கால் தோறும் புகுந்து துளையிட்ட தென்று வாட்டியது! நின்றான் இருந்தான் கிடந்தான் என்றாற்போல்கிடையில் அமைக்கப்பட்ட பாவாணர் உடலுக்கு எவரெவர் வளையம் வைத்தனர்; மாலை சூட்டினர்! அரசுச் சார்பிலே இறுதிச் சடங்கு நடக்குமெனின், முதல்வர் முதல், அமைச்சர்களும் வாரா திருப்பரோ? வாழ்ந்த நாளில் காத்துக் கிடக்க வைத்த பதவியரும் காத்துக் கிடந்து காண நேர்ந்த சூழல் நெக்குருகச் செய்தது; ஆனால் அது, நாட்டுக்கொரு பாடமாக அமைந்தால் அன்றோ பயன்பாடு! பண்பாடு! இருந்த போது போற்றிக் கொள்ளா