உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

211

இழப்பை எண்ணி, அதன் பின்னாவது செய்தக்க செயல்கள் செய்யப்பட வேண்டுமே! அஃதென்று வருமோ?

17-1-81 ஆம் நாள் பாவாணர் திருவுடல், கலைஞர் கருணாநிதி நகரில் இருந்து கீழ்பாக்கம் கல்லறைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது!

உணர்வுமிக்க நெஞ்சங்கள் அழுதன! தத்தம் குடும்பத்துத் தலைமகனை இழந்தார்போலப் பொங்கி அழுதனர்! இத்தகு மொழிநூல் வல்ல மாந்தரைக் காணல் எளிதோ என ஏங்கினர்! பாவாணர் திறத்தையும் உரத்தையும் பன்னிப் பன்னி இரங்கினர்! மாலையைச் சார்த்தும்போதே கண்ணீர் மாலையையும் சார்த்திய அன்பர்கள், பாவாணர் அமைதி முகம் கண்டு ஆறாத் துயருற்று அனலிடைப் புழுவெனத் துடித்தனர்! வாழ்வெல்லாம் வண்டமிழ்க்கே என வாழ்ந்த அந்த வாழ்வு கீழ்பாக்கம் கல்லறைக்குள் அமைந்தது!

கல்லறையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தைச் சீராக ஒழுங்குறுத்திச் சிலம்பொலி செல்லப்பனார் நடாத்தினார். பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் தலைமையில் அமைச்சர்கள் அரங்கநாயகம், பொன்னையன், இலங்கை அமிர்தலிங்கனார், பெருஞ்சித்திரனார், இளவரசு, இளங்குமரன், சனார்த்தனம், பொற்கோ, செல்லப்பனார், பொன்னடியான், வா.மு.சேதுராமன், சா. கணேசன், த.ச, தமிழன், சிறுவை மோகன சுந்தரன், செ. இராசு, புகழேந்தி, பாலசுந்தரம், தமிழமல்லன் ஆகியோர் இரங்கல்மொழிந்தனர். சிங்கைத் தமிழர் சார்பில் வீரப்பனும் கருநாடக மாநில உ.த.க. சார்பில் பூங்காவனமும் இரங்கல் தெரிவித்தனர்.

"தமிழறிஞர் ஒருவர்க்கு அரசு இத்தகைய சிறப்பு இதுவரை செய்ததாகத் தெரியவில்லை" என இதழ்கள் பாராட்ட அரசுச் சார்பில் இறுதிச் சடங்குகள் நிகழ்ந்தது உண்மை! அச்சிறப்பால் பாவாணர்க்குப் பயனா? அச்சிறப்பால் நாட்டுக்குப் பயனா?

கல்லறைக்கூட்டம் முடிந்ததும் உ.த.க. எதிர்கால நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்தனர். குடந்தை கதிர் தமிழ்வாணர் கூட்டததிற்கு ஏற்பாடு செய்தார். திரு. அ.நக்கீரனார் தலைமையில் கூட்டம் நிகழ்ந்தது. திரு. இரா. இளவரசு வரவேற்றார். திருவாளர்கள் பூங்காவனம், மி.மு. சின்னாண்டார்,