உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

த.கு. மகளிர் ஆடவர் மக்கள் ஆகிய அறுபதின்மர், தனிப் பேருந்தில் சுற்றுலாச் சென்று பாவாணரை 16-10-75 இல் சென்னையில் கண்டு 1/, மணிப்பொழுது அளவளாவினர். பாவாணர் உரையும் கலந்துரையாடலும் ஒலிப்பதிவுற்றன. உவகைக் களமாகவும் திகழ்ந்தன. தமிழ்க்குடும்பம் பற்றிப் பாவாணர் எண்ணம் பசுமையாகத் திகழ்ந்தது. பாவாணரும் நெய்வேலியில் தம் பெயர்க்குடும்ப விருந்தினராகவும் சிறந்த மகிழ்வுற்றார். அவருடன் பாவலரேறு பெருஞ் சித்திரனாரும் பங்கு கொண்டார்: பாவாணர் தமிழ்க் குடும்பம் பற்றிய பாவாணர் எழுத்து :

இந்நெய்வேலி நகரமைப்பில் பாவாணர் தமிழ்க் குடும்பம் என்று தமிழுணர்ச்சியாலும் பணியக ஒருமைப் பாட்டாலும் ஒன்றுபட்டு, திருநாள் பெருநாட்களில் கூட்டுக்குடும்பம் போலும் நெருங்கிய உறவினர் போலும் உண்டாட்டில் ஒன்று கலக்கும் ஒருதனித் தமிழ்க் கூட்டமான பதினொரு குடும்பத் தொகுதியால் நானும் என் நண்பரும் இன்று உயர்பெருந்தரமாக விருந்தோம்பப் பெற்றேம்.

தமிழுணர்ச்சியும் உழுவலன்பும் கலந்த அறுசுவையின் னடிசிலும் என் பெயர் தாங்கலும் இவ்வுலகில் உவமையில்லா ஒரு தனிச்சிறப்பும் என் உள்ளத்தை மறுமையும் மறவாவாறு இறுகப்பிணித்து விட்டன.

இக்குடும்பம் மேன்மேலும் தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவன் என்றும் அருள் பொழிக.

ஞா. தேவநேயன்

"உங்கள் தொழில் பணி இவற்றிற்கேற்ப மாத மொரு முறையோ, இருமுறையோ கூடுவது சிறப்பு. கூடுமானவரை தனித்தமிழில் உரையாடுங்கள். நம் தமிழர் பண்பாடு ஒழுக்கம் இவற்றைக் கடைப்பிடித்து வாழவேண்டும். தமிழர்களுக்குப் பகுத்தறிவு தன்மானம் நெஞ்சுரம் மூன்றும் மிகமிக வேண்டியவை. ஆடவன் பெண்ணிடம் எப்படிக் கற்பை எதிர்பார்க்கிறானோ அப்படியே தானும் கற்புடன் வாழ வேண்டும். இறை மறுப்போ உடன்பாடோ அவரவர்களின் விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. தமிழர்களுக்கு இன வுணர்வும் மொழியுணர்வும் இருகண்கள்!

குடும்பநிலையில் தலைவன் தலைவி அன்பு நிலையில் ஒன்றுபட வேண்டும். அன்பு நிலையில் இணைந்து வாழ்ந்தால்