உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பதிப்பக நோக்கங்கள் :

1. பாவாணரின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடு தலும் நூல்களை மறுபதிப்புச் செய்தலும் அவற்றின் பிறமொழி யாக்கங்களை வெளியிடுதலும்;

2.

3.

பாவாணர் கொள்கைகளைப் பரப்பும் வகையில் அவர் தமிழ் மொழியாய்வு பற்றிய திறனாய்வுகளை ஊக்குவித்து வெளியிடுதலும்:

பாவாணர் கொள்கைகளுக்கு உட்படுவனவும் அரண் செய்வனவும் தனித்தமிழ் வளர்ச்சி குறித்தனவுமான பல்துறை நூல்களை வெளியிடுதலும்

பாவாணர் பதிப்பகத்தின் நோக்கங்கள் ஆகும். இதன் முதற்பதிப்பாசிரியர் பேரா. கு. பூங்காவனம்; முதற்பொருளாளர் தாமோதரன். அறிவுரைக் குழுவினர்; பர். இரா. இளவரசு, பர். பொன்.கோதண்டராமன், பர். மு.தமிழ்க்குடிமகன், புலவர் இரா. இளங்குமரன், ம.இலெ.தங்கப்பா

உருபா

புரவலர் நன்கொடை உருபா 1000, உறுப்பினர் நன்கொடை 100. அச்சாகும் நூலில் ஒருபடி புரவலர்க்கும்

உறுப்பினர்க்கும் வழங்கப்படும்.

இப்பதிப்பக வழியாக வெளிவந்த முதல் நூல் என் அண்ணாமலை நகர்வாழ்க்கை என்பது. அடுத்து வெளிவருவது இப் 'பாவாணர்'

'பாவாணர் தமிழ்மன்றம்' என்றோர் அமைப்பு பெங்களூர் வசந்தா நகரில் உள்ளது.

பாவாணர் ஆராய்ச்சி நூலகம்

இப்பெயரிய நூலகம் மதுரை - திருநகரில், புலவர் இரா. இளங்குமரனால் நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட நாள் 26-6-83.

தமிழ்நாடு வேளாண் துறையமைச்சர் கா. காளிமுத்து நூலகத்தைத் திறந்து வைத்துத்தம் கொடையாக நூல்கள் ஆயிரம் வழங்குவதாகக் கூறினார். விழாத்தலைமை மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் தமிழண்ணல் அவர்கள் ஏற்றனர். பேரா. தமிழ்க்குடிமகனார், பேரா. வீ. ப. கா. சுந்தரனார், பேரா.அ.சங்கரவள்ளி நாயகனார் பாவாணர் குறித்தும் நூலகம் குறித்தும் சிறப்புரையாற்றினர். பாவாலர் ஆ. முத்துராமலிங்கனார்,