உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

225

பாவலர் ம.முத்தரசர் ஆகியோர் பாப்பொழிவு செய்தனர். புலவர் படிக்கராமு நன்றியுரைத்தார். நிறுவனரின் குடும்பத்தவர் அனைவராலும் தொகுக்கப்பட்ட அரிய நூலகம், இந்நாள் எண்ணாயிரம் நூல்களுடன் விளங்குகின்றது. பாவாணர் நூல்கள் அனைத்தையும் கொண்டிருப்பதுடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து அஞ்சல்களையும் கொண்டுள்ளது. முதுகலை பண்டாரகர் பயிற்சியாளர்க்குப் பயன்படுவதுடன், நூலாய் வாளர்க்கும் உதவுகின்றது. "இங்குள நூல்கள் இருந்து படிக்கவே" என்பது நூலக நடைமுறைக் குறிப்பு. நிறுவனரின் தமிழ்வருவாய் அனைத்தும் நூலாகவும் நூலகக் கட்டடமாகவும் எழுந்தமை சுட்டத் தக்கன. சொல்லாய்வுத் துறையில் ஈடிணையற்று விளங்கியதுடன், தம்மைத்தாமே விரும்பித் தம் துறைக்கு அழைத்தமை, தம் சொல்லாய்வை ஊக்கியமை ஆகிய நன்றிக் கடன்களின் வெளிப்பாடாகவும் அமைந்தது நூலகப் பெயரீடு.

பாவாணர் படிப்பகம்

தங்க வயல் உ.த.க. சார்பில் ஆண்டரசன் பேட்டையில் 29-7-84 ஞாயிறு காலை 10-30 மணிக்குப் பாவாணர் படிப்பகத் திறப்பு விழா நிகழ்ந்தது. திரு. த. குமணன் தலைமயில் மீட்போலை ஆசிரியர் திருமாவளவன், படிப்பகத்தைத் திறந்து வைத்தார். பாவாணர் படமும் திறக்கப்பட்டது. பேராசிரியர் கு. பூங்காவனம் சிறப்புரையாற்றினார்.

படிப்பகச் சார்பில் இதழ்கள் பல வருகின்றன; தனியாரும்சில இதழ்களை வழங்குகின்றனர். படிப்பகக் கட்டட இடம் சிறிதே எனினும் அதன் பணி பெரிதும் அரிதுமாம். தமிழ்ப் பற்றாளர் ஒருங்கு கூடி உணர்வொத்த ஒப்புரவாண்மை கொள்ள இப்படிப்பகம் உதவி வருதல்நிறைவான செய்தியாம்.. ஒதுக்குப் புறத்தில் உள்ள படிப்பகத்தை, ஆரவாரமிக்க சாலைப் பகுதியும் அறிந்திருத்தல் அதன் தொண்டின் விளக்கமாகும்.

பாவாணர் மையநூலகம்

சென்னை அண்ணா சாலையில் நூலக ஆணைக் குழுவின் பாவாணர் பெயர் தாங்கியுள்ளது. பாவாணர் மறைவின் பின், அவர் நினைவுக் குறியாக அரசின் சார்பில் செய்யப்பட்ட பெயர் மாற்றங்

சார்பில் அமைந்துள்ளயைமநூலகம்