உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

கொண்டது இந் நூலகமாகும். இதனை அந்நாள் முதல்வர் ம. கா.இராமச் சந்திரனார் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெருமக்கள் சார்பில் நிகழ்ந்த இரங்கல் கூட்டத்தில் அறிவித்தார்.

மாநகரில் சிறப்பான இடத்தில் அமைந்துள்ள இந்நூலகம், வாழ்நாள் எல்லாம் நூல்தொகுத்தல், நூல் ஆய்தல், நூல் எழுதுதல் என்றே இருந்த பாவாணர்க்குத் தக்க நினைவுச் சின்னமாகும். அரசு நூல் நிலையங்களுக்கு இதுவரை எந்தத் தனிப்பெயரும் தரப்படவில்லை. இனி அரசு நூல் நிலையத்திற்கும் பாவாணர் பெயர் வைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்பது முதல்வர் உரை. ஈப்போ பாவாணர் தமிழ் மன்றம்

பாவாணர் நினைவாக மலைநாடு ஈப்போவில் தமிழ் மன்றம் ஒன்று அவர் வாழும்போதே ஏற்படுத்தப்பட்டது. முப்பது உறுப்பினர்களைக் கொண்ட மன்றத்தின் தலைமையர் சுப்பையா. பாவாணர் இசைத்தமிழ்க்கலம்பகத்தில் இசைக் கிறார் :

பல்லவி

மாவாணர் தமிழ்மன்றம்

பைந்தமிழ்த் தண்பரங் குன்றம்

உருவடி

மாவாழும் மலையா என்றும்

மன்றும் ஈப்போ மகிழ நன்றும்

மூ)வாநற் சுப்பையா ஒன்றும்

முப்பான் உறுப்பினர் இப்போது துன்றும் - பா பாவாணர் நாட்காட்டியும் நாட்குறிப்பும்

பாவாணர் கண்டதும் கொண்டதுமாகிய தமிழியல் நாட்குறிப்பு தமிழ்ப் பற்றாளர் நடைமுறைப்படுத்துவதற்கு வாகாக நெய்வேலி 'அறவாழியார் தமிழரசி' அவர்களால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது. நாட்காட்டி என்னும் அளவில் நில்லாமல் பலப்பல தமிழூற்றச் செய்திகளையும் சான்றோர் பிறப்பு நினைவு நாள்களையும் நயத்தகு கருத்துகளையும் தாங்கி வெளிவருகின்றது. வேண்டுவார்க்கு அவர்தம் முகவரியிட்டும் அச்சிட்டு வழங்குகின்றது.