உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் நாட்குறிப்பு :

பாவாணர்

227

த.ச. தமிழனாரால் வெளியிடப்பட்டது. பாவாணர் வரலாற்றுச் சுருக்கம். வாழ்வியல் செய்திகள் நூலாய்வு ஆகிய வெல்லாம் கொண்ட அரிய ஆய்வுத் தொகை நூலாகவும் திகழ்கின்றது. மேலும், பாவாணர் பெயரால் பாவாணர் தனித் தமிழியக்கம், புதுவை, பாவாணர் நற்பணி மன்றம் தட்டாஞ் சாவடி, புதுவை; பாவாணர் பயிற்றகம், புதுவை, பாவணர் மன்றம், வாணியம்பாடி ; பாவாணர் பாசறை புதுக்கோட்டை; பாவாணர் இலக்கியக் கழகம், சென்னை; பாவாணர் கலைக்குடில் போழறப் பட்டி என்பனவும் பிறவும் உள! பாவாணர் பெயர்ச் சுட்டு இன்றேனும் பாவாணர் தொடர்பும் தொண்டும் கொண்டு திகழ்வன பிறவும் உள. தாயுமானவர், வள்ளலார் ஆகியோர்க்குப் பின்னர்ப் பாரதி, பாரதிக்குப் பின்னர்ப் பாவேந்தர், பாவேந்தருக்குப் பின்னர்ப் பாவலர் வரிசையுண்மைபோல் அறிஞர் கால்டுவெல், அவர்க்குப் பின்னர் மறைமலையடிகள், அடிகளுக்குப்பின்னர்ப் பாவாணர் அவர் வரிசையர் என 'வழிவழி' வருவார் தொண்டும் பாவாணச் சின்னமே! வழி நூல் சார்புநூல் நூல் என்பனபோல் முதல்நூலைத் தழுவினும் வேண்டும் விகற்பம் கூறினும் இவ்வகைத் தொடர்ச்சி எனவே முறைமை. ஆகலின் தமிழ்ச் சொல்லாய்வார் அனைவருக்கும் பாவாணர், ஊடகமாகத் திகழ்தல் கருதிப் பார்ப்பார் உணரத் தக்கதே.

உ.த.க.முதலிய அமைப்புகள்

பாவாணர் மறைவுக்குப் பின்னரும்உ.த.க. மறையாமல் காத்து வருகின்ற அமைப்பு ஆர்வலர்களைப் போற்ற வேண்டும். தமிழகப் பரப்பெல்லாம் ஆலென விழுதுவிட்ட அமைப்பின் நிலை சுருங்கிற்றே எனினும், சோர்விலாவண்ணம் தொடர்ந்து கடனாற்றிவரும் நெய்வேலி, திருச்சி ஊரகம், பாளை, திருவாரூர், நீடாமங்கலம், குடந்தை அமைப்புகளும்; புதுவை, வெங்காலூர், தங்கவயல் ஆகிய வெளிமாநில அமைப்புகளும் நெஞ்சில் பசியவை. தனித் தமிழ்க்கழகம், தமிழ்க் கழகம், மறைமலையடிகள் மன்றம் என வேறு பெயர்களைக் கொண்டவையும் பாவாணர் கருத்து வழியே கடனாற்றி வருவனவாகவும் உள்ளன. அவற்றின் தொண்டும் நினைவு கூரத்தக்கன. எவ்விடர் வரினும் எவர் எந்நோக்கு நோக்கினும் எம் கொள்கைவழி தக்கதே எனப் பாவாணர் வழியில் ஊன்றி நிற்கும் எழுத்தாளர்கள் பாவலர்கள்